2026: ராகு சுக்கிரன் சேர்க்கையால் 3 ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்
ஜோதிட ரீதியாக பிப்ரவரி மாதத்தில் முக்கியமான சில கிரக நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. அதனால் பிப்ரவரி மாதம் மிகவும் முக்கியமான மாதமாகவும் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பிப்ரவரி 6ஆம் தேதி செல்வம் மற்றும் மகிழ்ச்சியை குறிக்கக்கூடிய சுக்கிர பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.
அதே நேரத்தில் ராகு ஏற்கனவே கும்ப ராசியில் உள்ளார். இந்த நிலையில் ராகு மற்றும் சுக்கிரன் சேர்க்கை மார்ச் இரண்டாம் தேதி வரை தொடர இருக்கிறது.
சுக்கிரன் மற்றும் ராகு சேர்க்கை ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் குழப்பத்தை மற்றும் பொருளாதார நெருக்கடிகளை கொடுக்கலாம். இதனால் அந்த ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு சுக்கிரன் மற்றும் ராகு சேர்க்கையானது இவர்களுக்கு மனரீதியாக மிகப்பெரிய அளவில் குழப்பத்தை கொடுக்கப் போகிறது. வியாபார ரீதியாக இவர்கள் வெளியூருக்கு செல்லும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
உங்களுடைய தற்பெருமை மற்றும் கோபத்தை இந்த காலகட்டங்களில் நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். திடீர் மன அழுத்தம் மற்றும் சோர்வு உண்டாக வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. வீண் செலவுகளை குறைத்தால் சேமிப்பை பாதுகாக்கலாம்.
மகரம்:
மகர ராசியினருக்கு சுக்கிரன் மற்றும் ராகு சேர்க்கையானது இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அளவில் ஆடம்பர செலவுகளை உண்டுசெய்யப் போகிறது. பெருமைக்காக நீங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் ஒரு சில ஆடம்பர செலவுகளை செய்யக்கூடிய நிலைமை வரலாம்.
மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். புதிய நட்புகள் அறிமுகம் கிடைக்கும் பொழுது உங்களுடைய சொந்த விஷயங்களை பற்றி பகிர்ந்து கொள்ளாதீர்கள். வேலையில் கவனச் சிதறல் ஏற்படலாம் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்:
மீன ராசியினருக்கு சுக்கிரன் மற்றும் ராகு சேர்க்கையானது திடீர் என்று எதிர்பாராத செலவுகளை சந்திக்க கூடும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளில் ஒரு சில மன கசப்புகள் வரலாம். ஒரு சிலர் அவர்களுடைய பணம் மற்றும் உடைமைகளை தொலைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
முக்கியமான நபர்களை சந்திக்கும் பொழுது தேவை இல்லாத விஷயங்களை பேசாதீர்கள். வம்பு வழக்குகளில் நீங்கள் தலையிடாமல் இருப்பதே உங்களை பாதுகாக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |