2026: பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்கும் லட்சுமி நாராயண ராஜ யோகம்.. அதிர்ஷ்டம் யாருக்கு?
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு கால இடைவேளையில் அவர்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி புதன் பகவான் சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
அதே நாளில் தான் சுக்கிரனும் கும்ப ராசியில் இணைய இருக்கிறார். இதனால் சக்தி வாய்ந்த லட்சுமி நாராயண யோகம் உருவாக இருக்கிறது. இந்த யோகமானது நிச்சயம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டு செய்யும். இதனால் எந்த ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டம், பணவரவு, மகிழ்ச்சி காத்திருக்கிறது என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு உருவாக இருக்கக்கூடிய லட்சுமி நாராயண ராஜ யோகமானது அவர்களுக்கு நீண்ட நாள் தடைபட்ட பண வரவை பெற்றுக் கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தால் அவை எதிர்பாராத விதமாக நல்ல முறையில் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை உருவாகும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு உருவாகக்கூடிய இந்த லட்சுமி நாராயண ராஜ யோகமானது இவர்களுக்கு திருமண வாழ்க்கையில் சந்தித்து வந்த தடைகளை எல்லாம் போக்க போகிறது. வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடப் போகிறார்கள். நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லை என்று வருந்தி கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. தொழில் ரீதியாக சந்தித்து வந்த இடையூறுகள் எல்லாம் விலகும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு உருவாகக்கூடிய இந்த லட்சுமி நாராயண ராஜ யோகமானது அவர்களுக்கு தொழில் ரீதியாக நிறைய மாற்றத்தை கொடுக்கப் போகிறது. உங்களுக்கு நீண்ட நாட்கள் எதிர்பார்த்த அங்கீகாரமும் பாராட்டுகளும் அவர்களுக்கு கிடைக்கப் போகிறது. பூர்வீக சொத்துக்களில் சந்தித்து வந்த தடைகள் யாவும் விலகும். காதல் வாழ்க்கையில் இனிமையான சூழலை கொடுக்கும். பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் பெறுவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு உருவாகக்கூடிய இந்த லட்சுமி நாராயண ராஜயோகமானது அவர்களுக்கு வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகளை தடையின்றிநடத்தி கொடுக்கப் போகிறது. தொழில் ரீதியாக நீங்கள் சந்தித்து வந்த மன வருத்தங்கள் விலகும். தொழில் இடங்களில் உங்களுக்கு எதிரிகளாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறக்கூடிய நிலை உருவாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவதில் காலதாமதம் இருந்தால் நிச்சயம் அந்த பொருள் இந்த காலகட்டங்களில் உங்கள் கைகளுக்கு வந்து சேரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |