2026: ஜூலை மாதம் கவனமாக இருக்க வேண்டிய மிதுனம்.. பேச்சால் ஆபத்து காத்திருக்கிறதாம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். இவர்களுக்கு ஜூலை மாதம் பண வரவு மிகச் சிறப்பாக அமையப்போகிறது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். அதே போல், இந்த மாதம் அமைதி மாதம் என்று அமைதியை மட்டும் கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற சண்டைகள் தவிர்க்கலாம்.
உங்கள் கோபத்தை கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். ராசியிலே செவ்வாய் இருப்பதால் உங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் குறிப்பாக ரத்தம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
ஜூலை 27 முதல் சனிபகவான் வக்கிரம் அடைவதால் வேலையில் அதிக அலைச்சல் இருக்கும். பொருளாதாரம் நல்ல உயர்வை பெறும். சுக்கிரன் நீசம் அடைவது புத்திர பாக்கியம் அல்லது முதலீடுகளில் சில பிரச்சினைகளை கொடுக்கும்.
அதனால் தேவை இல்லாத ரிஸ்க் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. சூரியன் ஆட்சி பெறுவது சகோதரர்களால் நன்மை உண்டாகும்.
மேலும், இந்த கால கட்டங்களில் நீங்கள் சுக்கிரனுக்குரிய கஞ்சனூர் அல்லது அருகில் இருக்கக்கூடிய அம்பாள் ஆலயத்திற்கு சென்று வழிபடலாம், வெள்ளிக்கிழமை ஆடை தானம் அல்லது வெள்ளை தாமரை மல்லிகை சமர்ப்பித்து வழிபாடு செய்வதும் நல்ல பலனை கொடுக்கும்.
நீங்கள் ஜூலை 4 மற்றும் 8 ஆம் தேதிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும், ஜூலை மாதம் மிதுன ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |