2026 குருபெயர்ச்சி: இப்படி வழிபாடு செய்தால் குருபகவானின் முழு அருள் கிடைக்குமாம்
ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் அமைந்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். அது மட்டும் அல்லாமல் ஒரு கட்டத்தில் பாவ கிரகங்கள் இருக்கிறது ஆனால் குருவினுடைய பார்வை அந்த வீட்டில் படுகிறது என்றாலும் அந்த ஜாதகருக்கு கவலை இல்லை குரு பகவான் நன்மையை செய்வார்.
அப்படியாக, சுப கிரகமாக இருக்கக்கூடிய குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுவதற்கு சுமார் ஒரு வருட காலம் ஆகும். இந்த ஆண்டு மே 26 ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் குரு பெயர்ச்சி நடக்கிறது.
இந்த வருடம் குரு பகவான் அவருடைய உச்ச ராசியான கடக ராசியில் இடம் மறுக்கிறார். அப்படியாக, இந்த குரு பெயர்ச்சியினை முன்னிட்டு குருபகவானுடைய முழு அருளை பெற்று வாழ்க்கையில் எல்லா செல்வமும் பெற எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

வழிபாடு செய்யும் முறைகள்:
குருபகவானுடைய அருளை பெறுவதற்கு வியாழக்கிழமை தான் மிகவும் உகந்ததாக இருக்கிறது. அதிலும் வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் காலை 6 மணி முதல் ஏ7 மணி அளவில் இரவு 8 மணி முதல் 9 மணி அளவில் மிகச்சிறந்ததாக இருக்கிறது.
இந்த நேரத்தில் நாம் வழிபாடு செய்யும் பொழுது குடும்பத்தில் செல்வம், மகிழ்ச்சி போன்றவை கிடைக்கிறது. அதோடு, குரு பகவானுக்கு உகந்த நிறமாக மஞ்சள் நிறம் இருக்கிறது.
இந்த மஞ்சள் நிறத்தை குரு பகவானுக்கு சாற்றி வழிபாடு செய்யும்பொழுது நல்ல பலன்களை பெறலாம். அதைப்போல் மஞ்சள் வஸ்திரம் கொண்டைக்கடலை சாற்றையும் வழிபாடு செய்யலாம்.
குரு பகவான் அருளை பெற செல்ல வேண்டிய ஆலயங்கள்:
குரு பகவானுக்கு சிறந்த பரிகாரத்தனமாக ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் விளங்குகிறது. இந்த கோவிலில் இருக்கக்கூடிய நவகிரக சன்னதியில் அமைந்திருக்கக்கூடிய குருபகவான் வழிபாடு செய்தால் கோடி புண்ணியங்களும் வாழ்க்கையில் உள்ள துன்பங்களும் நொடிப்பொழுதும் நீங்கும்.

அதோடு சிவபெருமானின் வடிவமான தட்சிணாமூர்த்தியை குருவாக பாவித்து வழிபடுவது வழக்கம். ஆதலால் அவரை சுற்றி வந்து வழிபாடு செய்யும் பொழுது நமக்கு நன்மைகள் கிடைக்கும்.
அதே போல் சென்னையில் உள்ள இராமநாதேஸ்வரர் கோயில், தஞ்சாவூர் அருகே உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவில், மதுரை சோழவந்தான் அருகே உள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோயில், சென்னை - திருப்பதி வழித்தடத்தில் உள்ள பள்ளி கொண்டீஸ்வரர் கோயில், திருசெந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் உள்ள அன்னதான தட்சிணாமூர்த்தி, சிவகங்கையில் உள்ள ஞானகுரு தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்யும் பொழுது குரு தோஷம் நீங்கி வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |