2026: 12 ராசிகளுக்கும் குரு பெயர்ச்சி எப்படி உள்ளது? யார் கவனமாக இருக்க வேண்டும்

Report

 ஜோதிடத்தில் குரு பகவான் சுப கிரகமாக இருக்கிறார். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி நடக்க இருக்கிறது . குரு பகவான் கடக ராசியான அவருடைய உச்ச ராசியில் பெயர்ச்சியாகிறார். இதனால் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கம் ஏற்படுகிறது. அப்படியாக குரு பெயர்ச்சியால் எந்த ராசிகள் அதிக அளவில் பலன் பெற போகிறார்கள் என்று பார்ப்போம்.

குரு பெயர்ச்சியால் 2026 ஆம் ஆண்டு மிதுனம், கன்னி, விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்கள் அதிக அளவில் பலன் பெறப்போகிறார்கள். இவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகவும் யோகமான பலன் கொடுக்கிறது.

மேஷம், சிம்மம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசிகள் குரு பெயர்ச்சி காலங்களில் சில பரிகாரங்கள் செய்வதால் சில தீய தாக்கங்களிலிருந்து விடுபடலாம். மேலும், 12 ராசிகளுக்கும் குரு பெயர்ச்சி எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

தவறியும் தாய் தந்தையின் சாபம் வாங்கிவிடாதீர்கள்.. பேரழிவு நிச்சயமாம்

தவறியும் தாய் தந்தையின் சாபம் வாங்கிவிடாதீர்கள்.. பேரழிவு நிச்சயமாம்

2026: 12 ராசிகளுக்கும் குரு பெயர்ச்சி எப்படி உள்ளது? யார் கவனமாக இருக்க வேண்டும் | 2026 Guru Peyarchi Prediction For 12 Zodiac 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு நான்காம் இடமான சுகஸ்தானத்தில் இருப்பதால் இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு சுகபோகங்கள் அதிகரிக்கும். புதிய வண்டி, வாகனம் வீடு வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு மூன்றாம் இடத்தில் குரு இருப்பதால் இவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். மனதில் எதையும் சாதித்து விடலாம் என்ற தைரியம் உருவாகும். சகோதரர்களால் நன்மை பெறுவீர்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இரண்டாம் இடமான தனஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் இவர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை பெறக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு முதல் இடமான ஜென்மத்தில் குரு இருப்பதால் இவர்கள் ஆரோக்கியம் மிகுந்த கவனம் தேவை. கௌரவம் மற்றும் அந்தஸ்து உயர்ந்தாலும் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு 12-ஆம் இடம் விரய ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் இவர்களுக்கு சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாக்கும்.

உதயமானார் சனி பகவான்..பெயர் புகழ் பெறப்போகும் முக்கிய ராசிகள்

உதயமானார் சனி பகவான்..பெயர் புகழ் பெறப்போகும் முக்கிய ராசிகள்

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு 11-ஆம் இடத்தில் குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் இவர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். மூத்த சகோதரர்களால் இவர்களுக்கு நன்மை உண்டாகும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு பத்தாம் இடத்தில் தர்ம ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் தொழிலில் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடும். பணிச்சுமை அதிகரிக்கலாம்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் இவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். தந்தை வழியில் இருந்த சொத்துக்கள் கிடைக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு எட்டாம் இடத்தில் குரு பகவான் அட்டமா ஸ்தானத்தில் இருப்பதால் இவருக்கு மறைமுக லாபம் கிடைக்கலாம். ஆராய்ச்சியில் வெற்றிகள் உண்டாகும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு ஏழாம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் திருமண யோகம் நடைபெறும். நண்பர்கள் வழியாக நல்ல அனுகூலம் பெறுவீர்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு ஆறாம் இடத்தில் குரு பகவான் சத்ரு பகை ஸ்தானத்தில் இருப்பதால் இவர்களுக்கு கடன் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லக் கூடிய வலிமை பிறக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் இடத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் இவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பூர்விக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனை விலகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US