கந்த சஷ்டி: 48 நாட்கள் விரதம் இருக்க முடியவில்லையா? கடைசி 7 நாள் இதை செய்யுங்கள்

By Sakthi Raj Oct 14, 2026 12:19 PM GMT
Report

கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமான் பக்தர்களுக்கு கேட்ட வரத்தை உடனடியாக அருள் செய்பவர். அந்த வகையில், மகாகந்த சஷ்டி விரதம் 48 நாள் கடைபிடிக்க முடியாதவர்கள் ஏழு நாட்கள் மட்டும் கடைபிடிக்கக்கூடிய பக்தர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில், முருகப்பெருமானின் அருளை பெறுவதற்கு கந்த சஷ்டி கடைசி ஏழு நாள் என்ன பூஜை செய்ய வேண்டும்? எப்படி வழிபாடு செய்ய வேண்டும்? என்பதை பற்றி பார்ப்போம்.

முருகப்பெருமானுடைய அருளைப் பெறுவதற்கு நாம் சஷ்டி விரதத்தில் அவருடைய வேலுக்கு அபிஷேகம் பூஜைகளும் செய்வது அவசியம். திருமுறைகள் பாடி இறைவனிடம் நம்முடைய வேண்டுதலை சமர்ப்பிப்பது மிக மிக முக்கியமாக இருக்கிறது.

மேலும், முருகப்பெருமான் நினைத்து இருக்க கூடிய கந்தசஷ்டி விரதமானது ஒருவருக்கு மிகப்பெரிய அளவு புண்ணியத்தை சேர்த்து கொடுக்கும்.

கந்த சஷ்டி: 48 நாட்கள் விரதம் இருக்க முடியவில்லையா? கடைசி 7 நாள் இதை செய்யுங்கள் | 2026 How To Follow Kandha Sashti Vrtham For 7 Days

எண் கணிதம்: தொழிலில் சிறந்து விளங்க கோடீஸ்வரர்கள் பின்பற்றும் சூட்சமம் இது தான்

எண் கணிதம்: தொழிலில் சிறந்து விளங்க கோடீஸ்வரர்கள் பின்பற்றும் சூட்சமம் இது தான்

48 நாட்கள் நடைபெறும் திருவேல் வழிபாடு:

சஷ்டி விரதம் துவங்கிய நாள் முதல் தொடர்ந்து 48 நாட்களும் முருகப்பெருமானுடைய திருவேலுக்கு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறுவது வழக்கம். முருகப் பெருமானின் திருக்கரத்தில் இருக்கக்கூடிய வேல் தீமைகளை ஒழித்து நன்மைகளை நிலைநாட்ட கூடியதாக இருக்கிறது. அதனால், பக்தர்கள் அவர்களுடைய அறியாமையும் இருளும் நீங்க முருகப்பெருமானின் வழிபாடு செய்கிறார்கள்.

இறுதி ஏழு நாட்களின் தனிச்சிறப்பு :

கந்த சஷ்டி விரதம் 48 நாட்களில் இறுதி ஏழு நாட்கள் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. அதனுடன் திருமுறை விண்ணப்பமும் நடைபெறுகிறது. முருகப் பெருமானுக்கு மலர்களை சமர்ப்பித்து அபிஷேகம் செய்வதும் தீபம் ஏற்றி வழிபாடும் செய்வதும் சிறப்பாக கருதப்படுகிறது. இந்த காலகட்டங்களில் திருப்புகழ் பாடி வழிபாடு செய்வது எப்பேர்ப்பட்ட தோஷத்தையும் போக்குகிறது.

இந்த நாட்களில் கந்தர் அனுபூதி, கந்த சஷ்டி கவசம், திருவாசகம், தேவாரம் ஆகிய பாடல்களை பாடுவது மிக சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும்.

கந்த சஷ்டி: 48 நாட்கள் விரதம் இருக்க முடியவில்லையா? கடைசி 7 நாள் இதை செய்யுங்கள் | 2026 How To Follow Kandha Sashti Vrtham For 7 Days

2026 சனி வக்ர பெயர்ச்சி: யாருக்கு சனி நன்மை செய்ய போகிறார்?

2026 சனி வக்ர பெயர்ச்சி: யாருக்கு சனி நன்மை செய்ய போகிறார்?

வீட்டில் வேல் வழிபாடு :

இந்த காலகட்டங்களில் வீடுகளில் வேல் வைத்திருப்பவர்கள் தினமும் காலையில் அந்த வேலுக்கு முடிந்த பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து மலர்களை சூட்டி தீப தூபங்களை காட்டி வழிபாடு செய்யலாம்.

அதோடு, முடிந்தவர்கள் சூரசம்ஹாரம் அன்று மட்டும் முழு உபவாசம் இருந்து பக்தி உடன் வழிபாடு செய்யலாம். சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு அல்லது மறுநாள் திருக்கல்யாணம் நிறைவடைந்த பிறகு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

குறிப்பாக, ஒருவர் ஆரோக்கியத்திற்கு தகுந்த உணவுகளை எடுத்துக்கொண்டு நல்ல முறையில் விரதத்தை மேற்கொள்வது அவசியம்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US