2026: ஆஷாட நவராத்திரி எப்பொழுது? 9 நாட்கள் வழிபாடு செய்யும் முறைகள்

By Sakthi Raj Jul 14, 2026 09:06 AM GMT
Report

ஆனி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்கி ஒன்பது நாட்கள் கொண்டாட கூடிய ஒரு முக்கியமான நவராத்திரி என்றால் அது ஆஷாட நவராத்திரி ஆகும். இந்த ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் அன்னை வாராகிதேவியை மனம் உருகி வழிபாடு செய்தால் எல்லா பயன்களும் பெறலாம்.

அன்னை வாராகிய தேவி விவசாயம் மற்றும் வெற்றியின் அடையாளமாக இருக்கிறாள். லலிதாம்பிகையின் படைகளுக்கு சேனாதிபதியாக இருப்பதால் இவர் போர் தெய்வமாகவும் கருதப்படுகிறார்.

2026: ஆஷாட நவராத்திரி எப்பொழுது? 9 நாட்கள் வழிபாடு செய்யும் முறைகள் | 2026 How To Worship Ashada Navratri 9 Days

ஏன் ஒவ்வொரு கோவிலிலும் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது? இதன் பின்னால் இருக்கும் தெய்வீக காரணம் என்ன?

ஏன் ஒவ்வொரு கோவிலிலும் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது? இதன் பின்னால் இருக்கும் தெய்வீக காரணம் என்ன?

ஆகையால், அன்னை வாராகி தேவியை மனம் உருகி வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு எதிரிகள் தொல்லை, குடும்பத்தில் பிரச்சனை எல்லாம் விலகி அமைதி கிடைக்கிறது. அந்த வகையில், ஆஷாட நவராத்திரி 9 நாட்கள் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

வீடுகளில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு கலசம் வைத்தோ அல்லது வாராகி அம்மன் சிலை படத்திற்கு முன்பாக விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். அம்மனுக்கு பால் கலந்த நாட்டு சர்க்கரை மிகவும் பிடித்தமானது என்பதால் அதை நெய்வேத்தியமாக படைப்பது சிறப்பு. ஆஷாட நவராத்திரி தஞ்சை பெரிய கோவில் உட்பட பல இடங்களில் ஒன்பது நாட்களும் மிகச் சிறப்பாக நடைபெறும்.

நாள் 1: 

இந்த நாளில் அம்மனுக்கு இனிப்பு படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு தொழிலில் முன்னேற்றம் குடும்ப ஒற்றுமை கிடைக்கிறது.

நாள் 2: 

இந்த நாளில் வராகி அம்மனுக்கு மஞ்சள் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது திருமண யோகம் கைகூடி வருகிறது.

உங்கள் பிறந்த கிழமையே உங்கள் பலம்.. உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மற்றும் பரிகாரம்

உங்கள் பிறந்த கிழமையே உங்கள் பலம்.. உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மற்றும் பரிகாரம்

நாள் 3:

மூன்றாம் நாள் குங்குமம் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது மனதில் தைரியமும், உடல் நலம் தொடர்பான பிரச்சனையும் விலகுகிறது.

நாள் 4:

நான்காம் நாள் சந்தனம் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது மனக்குழப்பம் விலகி தெளிவான சிந்தனை கிடைக்கிறது.

நாள் 5:

ஐந்தாம் நாள் தேங்காய் பூ சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது பித்துருக்களால் ஏற்படுகின்ற தோஷம் மற்றும் ராகு தோஷம் நீங்குகிறது.

2026: ஆஷாட நவராத்திரி எப்பொழுது? 9 நாட்கள் வழிபாடு செய்யும் முறைகள் | 2026 How To Worship Ashada Navratri 9 Days

நாள் 6:

ஆஷாட நவராத்திரியில் ஆறாம் நாள் மாதுளம் பழம் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது ஆரோக்கிய குறைபாடுகள் மற்றும் தலைமைத்துவ பண்புகள் சிறப்பாக கிடைக்கிறது.

நாள் 7:

ஏழாம் நாள் நாம் அம்பாளுக்கு நவதானியம் படைத்த வழிபாடு செய்கின்ற பொழுது வாழ்க்கையில் சமநிலை கிடைக்கிறது.

நாள் 8:

எட்டாம் நாள் அம்மனுக்கு வெண்ணெய் சமர்ப்பித்து வழிபாடு செய்யும் பொழுது குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக அமைகிறது.

நாள் 9:

ஒன்பதாம் நாள் காய்கனி சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது நாம் நினைத்த காரியம் உடனடியாக நிறைவு பெறுகிறது.

அதேபோல், ஆஷாட மாதத்தில் வராகி அம்மன் வழிபாடு செய்வதற்கு பஞ்சமி திதி மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த தினத்தை தவிர விடாமல் வழிபாடு செய்வதும் நல்ல பலனை கொடுக்கும்.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US