2026: உருவாகும் புதாதித்ய ராஜயோகம்.. இவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உறுதி
நவகிரகங்களில் புதன் பகவான் கிரகங்களின் இளவரசனாக அழைக்கப்படுகிறார். இவர் ஒரு ராசியில் சுமார் 23 முதல் 27 நாட்கள் வரை சஞ்சாரம் செய்கிறார். அந்த வகையில் ஜனவரி 17ஆம் தேதி அன்று தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இவர் இடம் மாறினார்.
ஏற்கனவே அங்கு சூரியன் இருக்கிறார். அவருடன் புதன் இணைவதால் புதாதித்ய ராஜ யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் எந்த ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்று பார்ப்போம்.
மேஷம்:
புதன் பெயர்ச்சியால் மேஷ ராசியினர் உடைய பேச்சு ஆற்றல் சிறப்பாக இருக்க போகிறது. தங்களுடைய பேச்சுத் திறனால் இவர்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் பெற போகிறார்கள். ஒரு சிலர் புதிய வியாபாரம் அல்லது தொழில் தொடங்குவதை பற்றி யோசிப்பார்கள். மாணவர்கள் இந்த காலகட்டத்தில் படிப்பில் அதிக அளவில் கவனம் செலுத்தி நிறைய மதிப்பெண்கள் பெறக்கூடிய காலகட்டம் ஆகும். வழக்கு விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமாகவே அமையும்.
கடகம்:
புதன் பெயர்ச்சியால் கடக ராசியினருக்கு மனதில் இருக்கக்கூடிய பாரமானது குறைந்தது போல் அவர்கள் உணர்வார்கள். காதல் உறவுகள் இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு கைகூடி வரும். எடுத்த முயற்சிகள் இவர்களுக்கு நினைத்தது போல் நல்ல முடிவை பெரும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். மாணவர்களுக்கு இந்த காலகட்டமானது அவர்களுடைய திறமையை வெளிப்படுத்தி பெயரும் புகழும் பெறக்கூடிய காலகட்டமாகும்.
விருச்சிகம்:
புதன் பெயர்ச்சியால் விருச்சிக ராசியினருக்கு புதிய உறவுகளின் அறிமுகம் கிடைக்கும். நட்புகள் விரிவடையக்கூடிய காலகட்டமாகும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் அன்பையும் பெறுவீர்கள். பிள்ளைகளால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் நீங்கள் சமுதாயத்தில் நற்பெயர் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த விரிசல் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |