மீன ராசியில் வக்ரமாகும் சனி.. ஜூலை முதல் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

By Sakthi Raj May 23, 2026 08:30 AM GMT
Report

 ஜோதிட ரீதியாக ஒன்பது கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக சனி பகவான் இருக்கிறார். அப்படியாக, சனி பகவான் 9 கிரகங்கள் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் ஆவார். அப்படியாக, 2026 ஆம் ஆண்டு சனி வக்ர பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஜூலை 27ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் தனது வக்ர பெயர்ச்சியை தொடங்குகிறார். சனி பகவான் டிசம்பர் 11ஆம் தேதி வரை வக்கிர நிலையில் இருக்கிறார். சனியின் வக்ர பெயிற்சியால் ஒரு சில ராசிகளுக்கு எதிர்மறையான ஆற்றல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம். அவர்கள் இந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மீன ராசியில் வக்ரமாகும் சனி.. ஜூலை முதல் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் | 2026 July 23 To Dec 11Sani Vakra Peyarchi Palangal

சனிப்பெயர்ச்சி: ஏழரை சனியிலிருந்து விடுபட்டு ராஜயோகம் பெறும் 3 ராசிகள்

சனிப்பெயர்ச்சி: ஏழரை சனியிலிருந்து விடுபட்டு ராஜயோகம் பெறும் 3 ராசிகள்

ரிஷபம்:

ரிஷப ராசியினர் சனி வக்ர பெயர்ச்சி காலங்களில் இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பொருளாதார நெருக்கடிகள், மன அழுத்தம் போன்றவை இவர்கள் சந்திக்க நேரலாம். இந்த காலகட்டங்களில் வியாபார ரீதியாக நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் சில பின்னடைவுகள் சந்திக்கும் நிலை உள்ளது. பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம் ஆகும்.

சிம்மம்:

சனிபகவானுடைய வக்கிர பெயர்ச்சியால் இவர்களுக்கு குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பொருளாதார ரீதியாக நீங்கள் பின்னடைவை சந்திக்க கூடும். அதனால் அளவுக்கு மீறிய கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். வண்டி வாகனங்களில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். வார்த்தைகளை கவனமாக உபயோகிப்பது பிரச்சனைகளை தவிர்க்கும்.

ஒருவருக்கு குலதெய்வம் சாபம் இருப்பதை உணர்த்தும் முக்கியமான அறிகுறிகள்

ஒருவருக்கு குலதெய்வம் சாபம் இருப்பதை உணர்த்தும் முக்கியமான அறிகுறிகள்

கன்னி :

சனியின் வக்ரப் பெயர்ச்சியால் இவர்களுக்கு மன அழுத்தத்தை சந்திக்க கூடும். ஒரு சிலருக்கு நிதி நிலைமையில் ஏற்ற இறக்கங்களை பெறுவார்கள். அடிக்கடி பயணம் செல்லும் பொழுது உங்களுடைய பொருட்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கையில் அவ்வப்பொழுது சில பிரச்சனைகள் வந்து செல்லும். யாரையும் நம்பி எந்த காரியங்களையும் ஒப்படைக்காதீர்கள்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US