2026: நேர்கதிக்கு திரும்பிய புதன்..ஜூலை 24 முதல் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார்?
ஜோதிட சாஸ்திரத்தில் புதன் பகவான் தான் ஒருவருக்கு அறிவு, பேச்சு, மற்றும் வியாபாரம் கணக்கு ஆகியவற்றிக்கு காரணமாக இருக்கிறார்.
அந்த வகையில், ஜூலை 24, 2026 தேதி அன்று, புதன் பகவான் மிதுன ராசியில் நேராக பயணம் செய்கிறார். புதனின் இந்த நேரடிப் பயணம் சில ராசிகளுக்கு சில சிக்கலை மற்றும் கஷ்டங்களை கொடுக்கலாம். அவை எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
மேஷம்:
புதன் பகவானின் இந்த மாற்றம் இவர்களுக்கு சில எதிர்பாராத பிரச்சனை கொடுக்கும். ஆதலால், இந்த காலகட்டங்களில் இவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உயர் அதிகாரிகளுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் வரலாம். எந்த ஒரு விஷயங்களிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு புதன் நேரடி பயணம் இவர்களுக்கு எதிர்பாராத சில பிரச்சனைகளை கொடுக்கலாம். திடீர் செலவுகள் வரக்கூடும். இதனால் அவர்களுடைய பொருளாதாரம் பாதிக்கப்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் எதையும் கலந்து செய்வது நன்மை தரும். பணியிடங்களில் வேலை பளு அதிகரிக்கும். தேவை இல்லாமல் எதிலும் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு தேவையில்லாத தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இவர்கள் நீதிமன்றம் வரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் ரீதியாக கூட்டாளிகளுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் நம்பி எந்த ஒரு வேலையிலும் ஈடுபடாதீர்கள். பிள்ளைகள் மீது ஒரு கவனம் செலுத்துங்கள். இல்லையென்றால் சமுதாயத்தில் மரியாதை குறையலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |