2026: சுக்கிரன் மீது குரு பார்வை..உருவாகும் லாப திருஷ்டி ராஜயோகம்.. வசந்த காலம் யாருக்கு?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஜூலை 24ஆம் தேதி அன்று குரு மற்றும் சுக்கிரன் சிறப்பு சேர்க்கையால் லாப திருஷ்டி ராஜயோகம் உருவாகிறது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பாராத அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் திருப்புமுனை காத்திருக்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
இவர்களுக்கு இந்த காலகட்டம் மிகச்சிறந்த வாய்ப்புகள் தொழில் ரீதியாக கிடைக்கப் போகிறது. குடும்பத்தில் இவர்களுடைய பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
கணவன் மனைவி புரிந்து வாழ்பவர்களாக இருந்தால் கட்டாயமாக இந்த காலகட்டம் நல்ல புரிதல் உண்டாகும். நண்பர்களுடைய முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
மிதுனம்:
இந்த காலகட்டம் உங்களுக்கு குடும்பத்தில் அங்கீகாரம் கிடைக்கும். அதேபோல் வேலையில் உங்களுடைய திறமைக்கேற்ற பாராட்டுக்கள் பெறுவீர்கள்.
நீண்ட நாட்கள் எனக்கு இந்த விஷயம் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்களுக்கு அவையெல்லாம் கைக்கூடி வரப்போகிறது. நீங்கள் மனதில் நினைத்த விஷயங்கள் நிறைவேற கூடிய அற்புதமான காலகட்டமாகும்.
துலாம்:
இந்த காலகட்டம் நீங்கள் நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழ்வீர்கள். உங்களுக்கு வேலை ரீதியாக நிறைய வாய்ப்புகள் தேடி வரும். கடன் சுமை குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக திரும்பும். வேலையில் உங்களுக்கு தொந்தரவு செய்தவர்கள் விலகிச் செல்வார்கள். படிப்பிற்கான புதிய முயற்சிகள் கைக்கூடி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |