ராகு குரு: அக்டோபர் வரை ஊரே பொறாமைப்படும் அளவு வாழபோகும் 4 ராசிகள் யார் ?

By Sakthi Raj Jul 06, 2026 07:30 AM GMT
Report

 ஜோதிடத்தில் கிரக மாற்றங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அப்படியாக ஜூலை 7ஆம் தேதி முதல் அக்டோபர் இறுதிவரை குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் பலம் மிகவும் சாதகமாக அமைகிறது.

அவர்கள் இந்த காலகட்டங்களில் எதிர்பாராத விதமாக பல விதமான நன்மைகளை பெற போகிறார்கள். அந்த வகையில் யார் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை சிறப்பான வாழ்க்கை வாழ போகிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

9, 18, 27 நீங்கள் இந்த ராசியில் பிறந்தவர்களா? உங்களுக்கு எந்த தொழிலில் வெற்றியை கொடுக்கும்?

9, 18, 27 நீங்கள் இந்த ராசியில் பிறந்தவர்களா? உங்களுக்கு எந்த தொழிலில் வெற்றியை கொடுக்கும்?

மேஷம்:

இவர்கள் இந்த காலகட்டங்களில் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை பெறப்போகிறார்கள். நீண்ட நாட்கள் கைகளுக்கு வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். இவர்களே கைவிட்ட காரியங்கள் மீண்டும் துவங்கி இவர்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுக்கப்போகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. உடன் பிறந்தவர்கள் உங்களைப் புரிந்து நடந்து கொள்வார்கள்.

கடகம்:

இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு கடன் அடைக்க கூடிய யோகம் உருவாகும். தொழில் ரீதியாக மிகப்பெரிய அளவில் முன்னேற்றமும் அதை விரிவு படுத்துவதற்கான வேலையும் உங்களுக்கு சாதகமாக நடக்கும். பிள்ளைகளால் பெருமை பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி போன்ற சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதலும் ஒற்றுமையும் உருவாகும்.

பாம்பு கடித்தது போல் கனவு வந்தால் ஆபத்து வருமா? சாஸ்திரம் சொல்வதென்ன

பாம்பு கடித்தது போல் கனவு வந்தால் ஆபத்து வருமா? சாஸ்திரம் சொல்வதென்ன

துலாம்:

இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு தொழில் ரீதியாக நிறைய புதிய வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாட்கள் கிடைக்காத அங்கீகாரம் இவர்களுக்கு கிடைக்கும். குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள், வெளி வட்டாரம் விரிவடையும். புதிய நட்புகளின் அறிமுகத்தால் வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்வீர்கள். ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றமும், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் உண்டாகும்.

தனுசு:

இவர்களுக்கு இந்த காலகட்டம் பொன் பொருள் சேர்க்கை உருவாகும். நீண்ட நாட்கள் முடிவடையாத சில விஷயங்கள் முடிவிற்கு வரும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுக் கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் திடீர் சுபகாரிய நிகழ்ச்சிகளும் உருவாகும். பிள்ளைகளுக்காக வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். விலகிச் சென்றவர்கள் உங்கள் மதிப்பை அறிவார்கள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US