மீனத்தில் வக்ரமாகும் சனி.. அடுத்து138 நாட்களுக்கு அதிர்ஷ்டம் இவர்களுக்கு தான்
ஜோதிடத்தில் சனிபகவான் முக்கியமான கிரகமாக உள்ளார். மேலும், 9 கிரகங்களில் இவர் தான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். அப்படியாக தற்போது சனி பகவான் மீனராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். அவர் வருகின்ற 2026 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் வக்ர பெயர்ச்சியாக உள்ளார். இதனால் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பல மடங்கு வரப்போகிறது. அவர்கள் எந்த ராசியினர்? அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு சனியினுடைய இந்த வக்ர பெயர்ச்சி யாரும் இவர்களை நெருங்க முடியாத அளவிற்கு ஒரு மிக உயர்ந்த நிலைக்கு கூட்டிச் செல்ல போகிறது. சம்பள உயர்வு போன்ற எதிர்பார்த்த விஷயங்கள் வேலையில் நடக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இவர்கள் அருமையாக வாதாடி அவர்களுக்கு உரிய தர்மத்தை பெறக்கூடிய அற்புதமான காலகட்டமாகும்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு சனி பகவானுடைய இந்த வக்ர பெயர்ச்சியானது வருமானத்தை இரட்டிப்பாக்கி கொடுக்கப் போகிறது. புதிய வேலையையும் வெற்றியை அடைய செய்வதற்கான வழியையும் சனி பகவான் காட்டப் போகிறார். இவர்கள் இந்த காலகட்டங்களில் எடுக்கக்கூடிய காரியங்கள் அனைத்தும் வெற்றியை மட்டுமே பெறும். உங்களுக்கு தொந்தரவு கொடுத்த நபர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு சனி பகவானுடைய இந்த வக்ர பெயர்ச்சியானது ஆறு மாத காலங்களுக்கு இவர்கள் காட்டில் இவர்கள்தான் ராஜா என்பது போல் வாழ்க்கை வாழ போகிறார்கள். நிறைய பணம் சம்பாதிக்க கூடிய அற்புதமான காலகட்டம் என்பதால் அருமையாக பயன்படுத்திக் கொண்டால் உயர்ந்து விடலாம். எடுக்கின்ற முயற்சிகள் யாவும் கைகூடிவரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் சரணடைய கூடிய காலமாகும்.
மகரம்:
மகர ராசியினருக்கு சனி பகவானுடைய இந்த வக்ர பெயர்ச்சியானது மிகப்பெரிய அளவில் நன்மையை பெற்று கொடுக்க போகிறது. புதிய நண்பர்களுடைய அறிமுகத்தால் இவர்கள் மன மகிழ்ச்சியோடு வாழ போகிறார்கள். வியாபாரத்தில் முதலீடுகள் மற்றும் பங்கு சந்தை தொடர்பான விஷயங்கள் இவர்களுக்கு பல நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் இவர்களை தேடி வரப்போகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |