கஜகேசரி யோகம்: குரு பகவானால் இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்..
ஜோதிட ரீதியாக மிகவும் மங்களகரமான கிரகமாக குரு பகவான் இருக்கிறார். குருபகவான் உடைய பார்வை விழுகின்ற இடத்தில் எவ்வளவு பெரிய தோஷமோ பாவ கிரகமும் இருந்தால் அதனுடைய செயல் இழந்து போகக்கூடிய தன்மையை இந்த குரு பகவான் கொடுக்கிறார். அப்படியாக குரு சந்திர சேர்க்கை கஜகேசரி யோகம் உருவாக்குகிறது.
ஜூலை 15ஆம் தேதி குரு சந்திரன் சேர்க்கை நடக்க உள்ளது. கடக ராசியில் குரு சந்திரன் சேர்க்கையின் பொழுது இந்த யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் குறிப்பிட்ட சில ராசியினர் மிகப்பெரிய அளவில் ராஜயோகம் பெற இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பகவானுடைய இந்த யோகத்தால் இவர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். எதையும் தீர்க்கமாக யோசித்து உறுதியாக முடிவெடுக்கக்கூடிய தன்மை பிறக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். புதிய சொத்து சேர்க்கைகளை பற்றி பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும்.
கடகம் :
கடக ராசிக்காரர்களுக்கு குரு பகவானுடைய இந்த கஜகேசரி யோகமானது இவர்களுக்கு கடன் சுமையிலிருந்து விடுதலை கொடுக்கப் போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பொருளாதாரம் படிப்படியாக முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் பெற்றோர்களுடைய உடல் ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்:
கும்பராசிகளுக்கு கஜகேசரி யோகமானது இவர்களுக்கு கலைத்துறையில் நல்ல வாய்ப்பு கொடுக்கப் போகிறது. கூட்டு தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். குடும்பத்தினருடன் ஆன்மிக சுற்றுலா பயணம் செல்வீர்கள். தந்தை வழியே இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வாழ்க்கை துணை உங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார்கள்.