சனி வக்ர பெயர்ச்சி: ஜூலை 27 முதல் டிசம்பர் 11 வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

By Sakthi Raj Jun 10, 2026 10:19 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியின் நகர்வுகளும் நமக்கு வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது. அந்த வகையில், சனி பகவான் வக்ர பாதையில் பயணிக்க உள்ளார். அதாவது அவருடைய ஆட்டத்தை பின்னோக்கி செயல்படுத்த போகிறார். இது அனைத்து ராசிக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும்.

அதிலும் குறிப்பிட்ட சிலர் ராசியினர் இந்த காலகட்டங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. 2026 ஜூலை 27ஆம் தேதி முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை மொத்தம் 138 நாட்களுக்கு சனி பகவான் வக்ர நிலையில் இருக்கிறார். இது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு எதிர்மறை விளைவுகளை கொடுக்கக்கூடும். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

சனி வக்ர பெயர்ச்சி: ஜூலை 27 முதல் டிசம்பர் 11 வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் | 2026 July27 Saturn Retrograde Astrology Prediction

சனியின் ஆட்டம் ஆரம்பம்.. பணம் மற்றும் வேலையில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

சனியின் ஆட்டம் ஆரம்பம்.. பணம் மற்றும் வேலையில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

ரிஷபம்:

சனி பகவானுடைய வக்ர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக சில பிரச்சினைகளை கொடுக்ககூடும். வேலை செய்யும் இடங்களில் கடின உழைப்பை கொடுக்கக்கூடிய நிலை உண்டாகும். தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கலாம். பண விஷயங்களில் மிகவும் கவனமாக கையாள்வது அவசியம். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் பணப்பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் கருத்து மோதல்கள் ஏற்படலாம். பிறருடைய பேச்சைக் கேட்டு தவறான முடிவுகளை எடுக்காதீர்கள். சில முக்கிய வேலைகள் உங்களுக்கு தடைபடக்கூடும். மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது கவனம் வேண்டும்.

எந்த ராசிக்காரர்கள் எத்தனை முக ருத்ராட்சம் அணிய வேண்டும் ? முழு விவரங்கள் இதோ

எந்த ராசிக்காரர்கள் எத்தனை முக ருத்ராட்சம் அணிய வேண்டும் ? முழு விவரங்கள் இதோ

மகரம்:

மகர ராசியினருக்கு சனியின் வக்ரப் பெயர்ச்சியானது இவர்களுக்கு குடும்பம் மற்றும் பொருளாதார ரீதியாக மன அழுத்தத்தை கொடுக்கலாம். பணம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் தீவிரமாக ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். உங்களுடைய ரகசியங்களை நீங்கள் மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளுடைய எதிர்காலத்தை பற்றிய கவலைகள் விலகும். உங்களுக்கு பிடிக்காத சில வேளைகளை செய்து சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US