2026: மிதுனத்தில் சூரியன் பெயர்ச்சி: ஜூன் 16 முதல் 3 ராசிகளுக்கு வெற்றிகள் குவியப்போகிறது

By Sakthi Raj Jun 09, 2026 12:23 PM GMT
Report

 ஜோதிட சாஸ்திரத்தில் மிகப்பெரிய அளவில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார். அவ்வாறு கிரகங்களில் அரசனாக கருதப்படுகிறார். சூரிய பகவான் ஆளுமை மற்றும் தனித்துவ பண்புக்கு காரணியாக இருக்கிறார். அந்த வகையில், சூரியன் பெயர்ச்சி நடக்கின்ற பொழுதெல்லாம் மனிதர்களுடைய வாழ்க்கையில் அதனுடைய தாக்கம் உண்டாகும்.

சூரிய பகவான் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் பொழுதும் அவர் தன்னுடைய ராசியை மாற்றுகிறார். அவர் தற்பொழுது ரிஷப ராசியில் இருக்கிறார். ஜூன் 16ஆம் தேதி அவர் மிதுன ராசிக்கு செல்கிறார். சூரியனுடைய இந்த நட்சத்திர பெயர்ச்சியானது ஜூன் மாதம் எந்தெந்த ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் மாற்றத்தை கொடுக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஜூன் 16ஆம் தேதி அன்று நடக்கும் சூரியன் பெயர்ச்சியானது மிதுனத்தில் ஏற்கனவே புதன் இருப்பதால் இந்த சேர்க்கை 'புதாதிக்ய யோகத்தையும் உருவாக்குகிறது. புதன் பகவான் தன்னுடைய சொந்த ராசியில் அமைந்திருப்பதால் இது மிகவும் மங்களகரமான மற்றும் சக்தி வாய்ந்த கிரகம் மாற்றங்களாக மாறுகிறது. இதனால் மூன்று ராசிகள் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெறப்போகிறார்கள் அவர்கள் யார் என்று பார்ப்போம்.

2026: மிதுனத்தில் சூரியன் பெயர்ச்சி: ஜூன் 16 முதல் 3 ராசிகளுக்கு வெற்றிகள் குவியப்போகிறது | 2026 June 16 Suriyan Transit Bring Budhadityayogam

2026: கடகத்தில் குருவுடன் இணையும் சுக்கிரன்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

2026: கடகத்தில் குருவுடன் இணையும் சுக்கிரன்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

மிதுனம் :

மிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சியானது இவர்களுக்கு வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொடுக்கப்போகிறது. அவர்களின் வருமானம் அதிகரிக்க போகிறது. மேலும், பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

சூரிய பகவானின் தாக்கத்தால் இவர்களின் சமூக அந்தஸ்து மரியாதையும் உயரப்போகிறது. வேலை செய்யும் இடங்களில் முன்னேற்றத்தை பெறப்போகிறார்கள். வேலையில் இவர்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சியானது இவர்களுக்கு செல்வ வளத்தை அதிகரிக்கப்போகிறது. இவர்களுக்கு புதிய வருமானம் பிறப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்கள் கைகளுக்கு வராமல் இருந்த பணம் கிடைக்கும்.

அதே போல் இவர்கள் வியாபாரத்தில் எதிர்பாராத லாபத்தை பெறுவார்கள். அலுவலகப் பணிகளில் இவர்களுக்கு இருந்து வந்த தடைகள் விலகும். எதிர்பார்த்ததை போல் உயர்ந்த பதவிகளை பெறுவார்கள். இந்த காலகட்டங்களில் ஒரு பெரிய ஒப்பந்தத்தில் இவர்கள் கையெழுத்து போடக்கூடிய நிலை உருவாகும்.

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு அதிக அளவில் துரோகிகள் இருப்பார்களாம்

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு அதிக அளவில் துரோகிகள் இருப்பார்களாம்

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சியானது இவர்களுக்கு பூர்வீக சொத்துக்களில் இருந்து நன்மைகள் கிடைக்கப்போகிறதுl அதிர்ஷ்டம் முழுமையாக இவர்களுக்கு உண்டாகும். இந்த காலகட்டங்களில் தொழில் அதிபர்களுக்கு நல்ல லாபம் அமையப் போகிறது.

சமுதாயத்தில் அந்தஸ்தும் உயர் பதவிகளும் கிடைக்கும். குழந்தைகள் வழியே உங்களுக்கு பாராட்டுக்கள் உண்டாகும். அதே போல் நீண்ட நாட்கள் நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த அங்கீகாரம் கிடைக்கும் உங்களுடைய திறமை வெளிப்படும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US