2026: ஜூன் இறுதியில் உருவாகும் சிவயோகம்.. சிவனின் முழு அருளை பெறும் ராசிகள் யார் ?
2026 ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சிவயோகம் உருவாகிறது. இந்த யோகம் ஜூன் 25 10.54 வரை நீட்டுகிறது. ஜோதிடத்தில் இது மிகவும் சுபமான யோகமாக கருதப்படுகிறது. சூரியன் மற்றும் சந்திரனின் சுப நிலைகளால் இந்த சிவயோகம் உருவாகிறது.
இந்த யோகம் சிவபெருமானுடைய முழு அருளையும் நமக்குப் பெற்றுக் கொடுக்கிறது. இந்த சிவயோகம் ஒருவருக்கு கிடைக்கின்ற பொழுது அவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வாழ்க்கையில் திடீர் ஏற்றம் பெறுகிறார்கள். இந்த சிவயோகத்தால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள் யாரென்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சிவயோகம் ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கப் போகிறது. அலுவலகத்தில் நீண்ட நாட்கள் நீங்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும்.
வேலையில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பதவி உயர்வுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்த காரியம் உங்களுக்கு கை கூடி வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது இவர்களுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. திடீர் பண வரவு உண்டாகும். வருமானத்தில் புதிய வழிகள் பிறக்கும்.
இந்த காலகட்டங்களில் செய்கின்ற முதலீடுகள் மற்றும் வியாபார விரிவாக்கங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வை நோக்கி கூட்டிச்செல்லும். குடும்பத்தில் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் உள்ள குழப்பங்கள் விலகி தெளிவு உண்டாகும். வேலையில் உங்களுக்கு திறமைக்கேற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
உங்கள் மனம் ஆன்மீக பாதையை நோக்கி பயணம் செல்லும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் கிடைக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் விலகும். மாணவர்கள் படிப்பில் நல்ல ஆர்வம் கவனம் செலுத்துவார்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |