இந்த ராசியில் பிறந்தவர்கள் நட்புக்காக உயிரையே கொடுப்பார்களாம்.. யார் தெரியுமா?
நாம் ஒரு சிலரை பார்த்திருப்போம். அவர்கள் நண்பர்களுக்காக எதையும் செய்ய துணிவார்கள். நட்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இதற்கு அவர்களுடைய ராசி அதிபதிகள் முக்கிய காரணமாக அமைகிறார்கள். அந்த வகையில் எந்த ராசியில் பிறந்தவர்கள் நண்பர்களுக்காக உயிரையே கொடுப்பார்கள் என்று பார்ப்போம்.

கடகம்:
கடக ராசியை பொறுத்தவரை இவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். நண்பர்களுக்காக எப்பொழுதும் எதையும் எந்த நேரத்திலும் செய்வதற்கு அவர்கள் தயங்க மாட்டார்கள்.
குடும்பத்தை விடவும் இவர்கள் பல நேரங்களில் நட்பிற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பது உண்டு. நண்பர்கள் ஒன்று கேட்டு விட்டால் அதை இவர்கள் முடியாது என்று சொல்வதே இல்லை.
துலாம்:
துலாம் ராசி பொருத்தவரை இவர்கள் மிகவும் அன்பாகவும் ஆழமாகவும் பழகக் கூடியவர்கள். இவர்கள் யாருடனும் போலியாக நடிப்பதில்லை.
அது மட்டுமல்லாமல் இவர்கள் நண்பர்களிடம் எப்பொழுதும் நான் உனக்காக இருக்கிறேன் என்ற ஒரு தைரியத்தை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதேபோல் நண்பர்களுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அங்கு முதலில் துலாம் ராசி தான் இருப்பார்கள்.
தனுசு:
தனுசு ராசி ஒரு சுதந்திர பறவையாக இருந்தாலும் இவர்கள் நண்பர்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். நண்பர்களுக்கு எந்த நேரத்திலும் எந்த உதவி என்றாலும் இவர்கள் ஆலோசனை சொல்வதிலும் அவர்களுக்காக உதவி செய்வதிலும் இவர்கள் தயக்கம் காட்டுவதில்லை.
அதே போல் இவர்கள் நண்பர்களுக்கு சொல்ல கூடிய ஆலோசனை அது நண்பர்களுக்கு மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கக் கூடியதாகவும் அமைகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |