2026: ஜூலை மாதம் ரிஷப ராசிக்கு நற்செய்தி காத்திருக்கிறதாம்.. என்ன தெரியுமா?
ஜோதிடத்தில் சுக்கிர பகவானின் ஆட்சியை கொண்டு ரிஷப ராசியினர் எப்பொழுதும் தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்ப கூடியவர்கள். அந்த வகையில் ஜூலை மாதம் இவர்களுக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.
ஜூலை மாதத்தில் ரிஷப ராசியினருக்கு பதவி உயர்வு, புதிய வீடு அல்லது வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு நினைத்த இடத்தில் இருந்து பணவரவு சிறப்பாக அமையும். சுக்கிரன் ஜூலை இரண்டாம் தேதி நீசம் அடைகிறார்.
அதனால் உடல் நலனில் குறிப்பாக பெண்கள் தங்களுடைய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். நான்காம் இடத்தில் புதன் மற்றும் சூரியன் அமர்வது உங்களுடைய திறமைக்கேற்ற அங்கீகாரமும் பணியிடத்தில் அதற்கான பாராட்டுகளையும் உரிய மரியாதையும் பெறுவீர்கள் .
11 ஆம் இடத்தில் சனி பகவான் வக்ரமடையும் போது உங்களுக்கு பெரிய லாபங்களை தேடி தரக்கூடியதாக இருக்கும். இவர்கள் ஜூலை மாதம் சிறப்பாக அமைய புதன் பகவானின் வழிபட திருவெண்காடு செல்லலாம். கோவிலுக்கு சென்ற விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்வது சிறந்த பலன்களை தரும்.
பச்சை நிற ஆடைகளை தானம் செய்யலாம். பெருமாளுக்கு துளசி மாலை சாற்றுவது போன்றவை சிறப்பான பலன்களை கொடுக்கும். ஜூலை மாதம் இந்த 10, 11, 12, 26, 27 தேதியில் கவனமாக இருந்து விட்டால் நன்மை உண்டாகும்.
அப்படியாக, ஜூலை மாதத்தில் அவர்களுக்கு இன்னும் என்ன சிறப்பான விஷயங்கள் நடக்க இருக்கிறது என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிவித்துக் கொள்வோம்,