24 ஏகாதசி விரதம் இருந்து முழு பலன் தரும் நிர்ஜலா ஏகாதசி எப்பொழுது ? தவறவிடாதீர்கள்

By Sakthi Raj Jun 18, 2026 04:32 AM GMT
Report

 இந்து மதத்தில் முக்கியமான விரதங்களில் இந்த ஏகாதசி விரதம் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறை என இரண்டு ஏகாதசி விரதங்கள் என்று மொத்தம் வருடத்திற்கு 24 ஏகாதசி விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த 24 ஏகாதசி தினத்தன்று எல்லோராலும் விரதம் இருந்து வழிபாடு செய்ய முடியாது.

அப்படி 24 ஏகாதசிகளில் விரதம் கடைபிடிக்க முடியாதவர்கள் வருடம் வருகின்ற இந்த ஒரே ஒரு ஏகாதசி தினத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் வருகின்ற ஏகாதசி தினத்தன்று விரதம் இருந்து பெருமாளை வழிபட்ட முழு பலனை பெறலாம் என்கிறது சாஸ்திர நூல்கள்.

அதாவது ஆனி மாதம் வளர்பிறையில் வருகின்ற நிர்ஜலா ஏகாதசி அன்று மட்டும் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் ஏகாதசி தினத்தன்று விரதம் இருந்த பலனை பெறலாம். அதனால் தான் நிர்ஜலா ஏகாதசியை மகா ஏகாதசி என்றும் பீமன் அனுஷ்டித்த ஏகாதசி என்பதால் பீமன் ஏகாதசி என்றும் அழைப்பார்கள்.

24 ஏகாதசி விரதம் இருந்து முழு பலன் தரும் நிர்ஜலா ஏகாதசி எப்பொழுது ? தவறவிடாதீர்கள் | 2026 June 25 Benefits Of Fasting Nirjala Ekadashi

2026: ஜூன் இறுதியில் உருவாகும் சிவயோகம்.. சிவனின் முழு அருளை பெறும் ராசிகள் யார் ?

2026: ஜூன் இறுதியில் உருவாகும் சிவயோகம்.. சிவனின் முழு அருளை பெறும் ராசிகள் யார் ?

அதேபோல் ஜேஷ்ட மாதத்தில் வருகின்ற ஏகாதசி என்பதாலும் இதை ஜேஷ்ட ஏகாதசி என்றும் சொல்வார்கள். புராணங்களின் அடிப்படையில் பாண்டவர்களின் பீமனுக்கு மட்டும் தொடர்ந்து விரதம் இருந்து வழிபாடு செய்வது கடினமாக இருந்து வந்தது.

இதனால் மகரிஷி வியாசகரின் அறிவுரையை படி அவர் நிர்ஜலா ஏகாதசி தினத்தன்று கடுமையாக விரதத்தை கடைப்பிடித்து உணவு தண்ணீர் இரண்டையும் தவிர்த்து பீமன் விரதம் மேற்கொண்டதால் அவர் வருடம் முழுவதும் 24 ஏகாதசிகளில் விரதம் இருந்த புண்ணிய பலனை பெற்றதாக சொல்லப்படுகிறது.

நிர்ஜலா ஏகாதசி 2026 எப்போது?

நிர்ஜல ஏகாதசி 2026 தேதிஜூன் 25 வியாழன்
ஏகாதசி திதி துவக்கம்ஜூன் 24 இரவு 09.47
ஏகாதசி திதி நிறைவுஜூன் 25 இரவு 10.59
பாரணை நேரம்ஜூன் 26 காலை 06.00 - 08.39

நிர்ஜலா ஏகாதசி ஏன் சிறப்பு ?

நிர்ஜலா என்பதற்கு தண்ணீர் இல்லாமல் என்பது பொருள். அதாவது இந்த விரதம் என்பது தண்ணீர் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் கடைபிடிக்க கூடிய ஒரு முக்கியமான விரதம் ஆகும்.

சாஸ்திரங்களின்படி இந்த விரதத்தை எவர் ஒருவர் பக்தியுடனும் விதிமுறைகளின் படியும் மேற்கொள்கிறார்களோ அவர்களுக்கு வாழ்க்கையில் செல்வ வளமும் அவர்களுடைய ஆசைகள் நிறைவேறியும் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதுமட்டுமல்லாமல் 24 ஏகாதசிகளில் விரதம் இருந்த மிகப்பெரிய புண்ணிய பலனும் இவர்கள் பெறுகிறார்கள். வாழ்க்கையில் இந்த பிறவிகள் மட்டுமல்லாமல் முற்பிறவியில் செய்து கர்ம வினைகளும் இவர்களுக்கு விலகுகிறது.

24 ஏகாதசி விரதம் இருந்து முழு பலன் தரும் நிர்ஜலா ஏகாதசி எப்பொழுது ? தவறவிடாதீர்கள் | 2026 June 25 Benefits Of Fasting Nirjala Ekadashi

இறப்பு என்றால் என்ன? இறந்தவர்கள் உயிருடன் திரும்ப வர முடியுமா?

இறப்பு என்றால் என்ன? இறந்தவர்கள் உயிருடன் திரும்ப வர முடியுமா?

நிர்ஜலா ஏகாதசி விரத முறை :

அன்றைய தினம் அதிகாலை எழுந்து குளித்து மஞ்சள் நிற ஆடை உடுத்தி விரதத்தை துவங்க வேண்டும் பஞ்சாமிர்தம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதோடு விஷ்ணு பகவானுடைய மந்திரங்கள், விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

இந்த நாளில் குடிநீர் தானம் வழங்குவது, மரம் மற்றும் செடிகளுக்கு நீர் ஊற்றுவது விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் வழங்குவது போன்றவை மிகச் சிறந்த பலனை கொடுக்கும். ஏழை எளியவர்களுக்கு முடிந்த உணவு உடை தானம் செய்வதும் சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும்.    


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US