இன்று சனி மகா பிரதோஷம்.. இந்த தினத்தை தவற விட்டால் 2027 வரை காத்திருக்க வேண்டும்
ஒரு மனிதனுக்கு அவன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் அவனுடைய கர்ம வினைகள் ஆனது குறைய துவங்க வேண்டும். அதற்கு அழிக்கும் கடவுளான சிவபெருமானுடைய அருள் வேண்டும்.
சிவபெருமான் அழிக்கும் கடவுள் என்று சொல்வதற்கான காரணம் அவர் ஒரு மனிதனுடைய பாவங்கள் கர்ம வினை,அகங்காரம், ஆணவம் போன்றவற்றை அடியோடு அழித்து நல்ல வளர்ச்சி கொடுப்பவர்.
அப்படியாக, அவரை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாளாக பிரதோஷ தினம் இருக்கிறது. அதிலும் சனிக்கிழமை வருகின்ற பிரதோஷம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம், அன்றைய தினம் சிவபெருமானையும் சனீஸ்வரனையும் வழிபாடு செய்ய நம் வாழ்க்கையில் சனிபகவானால் ஏற்படுகின்ற தாக்கங்கள் குறையும்.

சனி மகா பிரதோஷத்தின் சிறப்புகள்:
இந்த நாளில் நாம் சனி பகவானையும், சிவபெருமானையும் வழிபாடு செய்ய மிக உகந்த நாளாக இருக்கிறது. மேலும், பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபாடு செய்ய நமக்கு பாவ நிவர்த்தி கிடைக்கிறது.
அதோடு சனி பிரதோஷ தினத்தன்று சனி பகவானை வழிபாடு செய்யும் பொழுது சனிதோஷம், அஷ்டம சனி போன்ற பாதிப்புகளிலிருந்து நாம் சற்று விடுபடலாம்.

சனி பிரதோஷ வழிபாட்டு முறை:
பிரதோஷ காலமான மாலை 4:30 மணி முதல் 6 மணி வரை நாம் வழிபாடு செய்வது சிறந்த பலன் கிடைக்கும். அன்றைய தினம் சிவலிங்கத்திற்கு பால், தயிர், நெய், தேன் பஞ்சாமிர்தம் மற்றும் வில்வ இலைகளால் அபிஷேகம் செய்யப்படும். இந்த காலகட்டங்களில் நாம் அபிஷேகத்திற்கு உரிய பொருட்களை கட்டாயம் வாங்கிக் கொடுக்கலாம்.
பிறகு நாம் நந்தி பகவானை வணங்கி சிவபெருமானை 11 முறை பிரதட்சிணம் செய்ய வேண்டும். பிறகு 108 முறை "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை கோவிலில் அமர்ந்து பாராயணம் செய்வது சிவனின் முழு அருளையும் பெற்றுக் கொடுக்கும்.
சனி பிரதோஷ வழிபாட்டின் நன்மைகள் :
சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறந்த மாற்றத்தை கொடுக்கும். நமக்கு சனியால் ஏற்படுகின்ற தோஷம் விலகுகிறது. வேலை தொழில் வியாபாரத்தில் உண்டான தடை உடைந்து நல்ல வருமானம் கிடைக்கும்.
நீண்ட நாள் கடன் பிரச்சனையால் மன அமைதியின்மை கொண்டிருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். குடும்பத்தில் ஒற்றுமையை, செல்வ வளம் மற்றும் ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |