குரு பெயர்ச்சி 2026: ஜூன் 2 ஆம் தேதி பிறகு மாற்றத்தை சந்திக்க போகும் ராசிகள்
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக குரு பகவான் இருக்கிறார். குரு பகவானுடைய பார்வை ஒருவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமைந்து விட்டால் அந்த ஜாதகர் மரியாதையோடும் நல்ல கல்வி, அறிவு வேலையோடும் வாழ்வார்.
அந்த வகையில் ஜூன் இரண்டாம் தேதி குரு பகவான் கடக ராசியில் பெயர்ச்சியாகிறார். இந்த கிரகமாற்றம் குறிப்பிட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
ஜோதிடத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறுகிறார். ஆக குரு பகவானுடைய இந்த இடமாற்றமானது அக்டோபர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கும். அதன் பிறகு சிம்ம ராசிக்கு அவர் நகர்கிறார்.
இந்த நேரத்தில் குரு சந்திரனுடன் சேர்ந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகிறது. இந்த ராஜயோகம் மிகவும் மங்களகரமாக பார்க்கப்படுகிறது. இதனால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெற்று தொழில், கல்வி, ஆரோக்கியம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள். அதை பற்றி பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியானது இவர்களுக்கு மிகவும் சாதகமான பலனை கொடுக்கப்போகிறது. இந்த காலகட்டங்களில் நீண்ட நாட்கள் திருமணம் ஆகவில்லை என்ற வருத்தப்படுபவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பொருளாதார நிலைமை மேன்மையடையும். வேலை செய்யும் இடங்களில் உங்களை புரிந்து நடந்து கொள்வார். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கஜகேசரி யோகமானது இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகிறது. தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள்.
புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டு கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும் அதற்கான முதலீடுகளையும் செய்து கொள்வீர்கள். பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக செய்யக்கூடிய வழிமுறைகள் இனிமையாக முடியும். கடன் பிரச்சனை விலகும். சேமிப்பு திட்டம் அதிகரிக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் மற்ற ராசிக்காரர்களை விட மிகவும் நல்ல பலன்களை கொடுக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமை திறன் சிறப்பாக இருக்கும்.
புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடக்கூடிய யோகம் கிடைக்கும். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் பெறக்கூடிய நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |