2026 ஜூன்: விருச்சிக ராசியினருக்கு குரு பெயர்ச்சி எப்படி உள்ளது ?

By Sakthi Raj May 29, 2026 07:46 AM GMT
Report

ஜோதிடத்தில் குரு பகவான் சுப கிரகமாக இருக்கிறார். இவருடைய அருட்பார்வை ஒருவருக்கு கிடைத்துவிட்டால் கட்டாயமாக இவர்களுக்கு வாழ்க்கையில் எல்லா வளமும் உண்டாகும்.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சியால் என்ன மாற்றங்கள் நடக்க இருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.

ஜூன் மாதத்தில் குரு பகவான் இவர்களுக்கு ஒன்பதாம் இடத்திற்கு வருவதால் எல்லா சௌபாக்கியங்களும் இவர்கள் பெறப்போகிறார்கள். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு இது சிறந்த காலகட்டமாக அமைகிறது. அதாவது ivf போன்ற சிகிச்சை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த காலகட்டம் சரியானதாக அமையும்.

தவறியும் உங்கள் வீடுகளில் அனுமன் படத்தை இந்த திசையில் வைத்து விடாதீர்கள்

தவறியும் உங்கள் வீடுகளில் அனுமன் படத்தை இந்த திசையில் வைத்து விடாதீர்கள்

மேலும், பத்துக்குடைய சூரியன் மற்றும் புதன் எட்டாம் இடத்தில் இருப்பதால் இவர்களுக்கு வேலை ரீதியாக சில குழப்பங்களும் அல்லது வேலையில் சில கவன சிதறல் ஏற்படலாம். அதை தவிர்க்க கவனமாக செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் உண்டு.

ஏழாம் இடத்தில் செவ்வாய் மற்றும் ஒன்பதாம் இடத்திற்கு செல்லும் சுக்கிரன் காரணமாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நான்காம் இடத்தில் இருக்க கூடிய ராகு பகவான் குடும்பத்தில் சில நேரங்களில் பிரிவினையும் கொடுக்கும் கவனமாக பேச்சுவார்த்தைகளில் இருப்பது அவசியம்.

இவர்களுடைய பிரச்சினைகள் தீர இவர்கள் திரு நாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்து வந்தால் நல்ல திருப்புமுனை ஆக அமையும். மேலும், விருச்சிக ராசிக்கு ஜூன் மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம். 


 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US