2026 கந்த சஷ்டி விரதம்.. 48 நாட்கள் விரதம் துவங்கும் நாள் மற்றும் விரதம் இருக்கும் முறை

By Sakthi Raj Sep 30, 2026 04:38 AM GMT
Report

கந்த சஷ்டி விரதம் என்பது முருகப்பெருமானுக்கு உரிய மிக முக்கியமான விரதம் ஆகும். மாதம் தோறும் வரக்கூடிய வளர்பிறை, தேய்பிறை என இரண்டு பட்சங்களிலும் சஷ்டி திதி வந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய சஷ்டி விரதத்தை மகா கந்த சஷ்டி விரதம் என்று சொல்கின்றோம்.

அதாவது ஐப்பசி மாதத்தில் அசுரர்களிடம் ஐந்து நாட்கள் போரிட்டு ஆறாவது நாளான சஷ்டியில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. அதனால் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய மகாகந்தசஷ்டி விழாவின் பொழுது பக்தர்கள் ஆறு நாட்கள் விரதம் இருந்து வழிபடுகிறார்கள்.

2026 கந்த சஷ்டி விரதம்.. 48 நாட்கள் விரதம் துவங்கும் நாள் மற்றும் விரதம் இருக்கும் முறை | 2026 Kanda Sashti Viratham Start Date And Rules

இந்த ஜாதக அமைப்பு பெண்களுக்கு தெய்வ அனுக்கிரகம் நிறைந்த கணவர் கிடைப்பாராம்

இந்த ஜாதக அமைப்பு பெண்களுக்கு தெய்வ அனுக்கிரகம் நிறைந்த கணவர் கிடைப்பாராம்

 

சிலர் இந்த நேரத்தில் முருகப்பெருமானிடம் முக்கியமான வேண்டுதல்களை வைத்து அது நிறைவேறுவதற்காக விரதம் இருப்பவர்கள் சூரசம்ஹாரத்திற்கு 48 நாட்கள் முன்பாகவே விரதத்தை தொடங்கி கடுமையாக விரதம் இருப்பது உண்டு. இவ்வாறு இருக்கக்கூடிய விரதத்தை மண்டல விரதம் என்று சொல்வதுண்டு.

கந்தசஷ்டி விரதம் 2026 :

கந்த சஷ்டி விழா 2026 துவங்கும் நாள் நவம்பர் 10 செவ்வாய்

சூரம்சம்ஹாரம் 2026 நவம்பர் 15 ஞாயிறு

முருகன் திருக்கல்யாணம் 2026 நவம்பர் 16 திங்கள்

48 நாள் விரதம் துவங்கும் நாள் செப்டம்பர் 29 செவ்வாய்

2026 கந்த சஷ்டி விரதம்.. 48 நாட்கள் விரதம் துவங்கும் நாள் மற்றும் விரதம் இருக்கும் முறை | 2026 Kanda Sashti Viratham Start Date And Rules

வீடுகளில் செல்வம் பெருக புதன்கிழமை காமாட்சி அம்மன் விளக்கு வழிபாடு செய்வது எப்படி?

வீடுகளில் செல்வம் பெருக புதன்கிழமை காமாட்சி அம்மன் விளக்கு வழிபாடு செய்வது எப்படி?

கந்த சஷ்டி விரதம் துவக்கும் முறை : 

கந்தசஷ்டி விரதத்தை செப்டம்பர் 29ஆம் தேதி அன்று காலையில் குளித்து வீட்டில் இருக்கக் கூடிய முருக பெருமான் படத்திற்கு முன்பாக விளக்கேற்றி வைத்து விரதத்தை துவங்கலாம். முடிந்தவர்கள் கட்டாயம் அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமான் ஆலயம் செல்லலாம்.

48 நாட்கள் விரதம் இருப்பவர்கள் தினம் ஒரு வேளை மட்டும் சாப்பிடாமல் இருக்கலாம் அல்லது சைவ உணவுகளை எடுத்துக் கொண்டும் விரதத்தை துவங்கலாம். தினமும் வீடுகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் முருகப்பெருமான் படத்திற்கு முன்பாக விளக்கேற்றி முருகப் பெருமானுக்குரிய மந்திரத்தை பாராயணம் செய்வது அவசியம்.

கந்தசஷ்டி வேல்மாறல், திருப்புகழ் ஆகியவற்றை இந்த காலகட்டங்களை படிப்பது இவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தோஷங்கள் மற்றும் வேண்டிய பலனை உடனடியாக பெற்றுக் கொடுக்கக் கூடியது.

2026 கந்த சஷ்டி விரதம்.. 48 நாட்கள் விரதம் துவங்கும் நாள் மற்றும் விரதம் இருக்கும் முறை | 2026 Kanda Sashti Viratham Start Date And Rules 

செப்டம்பர் 29ம் தேதியை தவற விட்டவர்கள் என்ன செய்யலாம்?

பலருக்கும் செப்டம்பர் 29ஆம் தேதி அன்று காலை 48 நாள் கந்த சஷ்டி விரதம் துவங்க வேண்டும் என்பது தெரியாமல் இருந்தாலும் பயம் கொள்ள தேவையில்லை. அவர்கள் செப்டம்பர் 30ம் தேதி அன்று புரட்டாசி மாதத்தில் வரும் முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திரம் வரும் நாளில் 48 நாட்கள் கந்த சஷ்டி விரதத்தை துவங்கலாம்.

பிறகு முருகன் திருக்கல்யாணம் வரை விரதத்தை தொடரலாம். இந்த நாளில் விரதத்தை துவங்க முடியாதவர்கள் கவலைப்பட தேவையில்லை. அக்டோபர் 2ஆம் தேதி முதல் 21 நாட்கள் கந்த சஷ்டி விரதத்தை தொடங்கி கடைப்பிடிக்கலாம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US