2026: கேது பெயர்ச்சியால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
ஜோதிடத்தில் நிழல் கிரகமாக இருக்கக்கூடியவர் கேது பகவான். இவர் ஜோதிடத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். மேலும், கேது பகவான் ஒருவருக்கு ஞானத்தை பல கடினமான காலம் வழியாகவே வழங்கக்கூடியவர். உண்மையில் கேது ஒரு பொருளை நம்மிடம் பறித்துக் கொண்டு தான் அந்த பாடத்தை நமக்கு கற்று கொடுப்பார்.
ஆதலால் இவரை அசுப கிரகமாகவும் சொல்கிறார்கள். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு கேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்,செய்கிறார். இதனால் குறிப்பிட்ட சில ராசிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் என்ன மாதிரியான பிரச்சனைகள் கேது பகவானால் வரக்கூடும் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
இந்த காலகட்டங்களில் நிறைய மன குழப்பங்களை சந்திக்க போகிறார்கள். முக்கியமாக தொழிலில் சரியான முடிவு எடுக்க முடியாத மன அழுத்தம் இருக்கும். மேலும், குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் தொடர்ந்து இவர்களுக்கு மன கசப்புகள் வரக்கூடிய நிலை உள்ளது.
மாணவர்களுக்கு படிப்பில் சரியான கவனம் செலுத்த முடியாத நிலை வரலாம். அமைதியாக எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாத அமைப்பு இருப்பதால் இவர்கள் தியானம் மேற்கொண்டு கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம் ஆகும்.
கன்னி:
இவர்களுக்கு இந்த காலகட்டம் குடும்பம் தொடர்பான ஒரு சில சிக்கலை கொடுக்க போகிறது. அதாவது குடும்பத்தில் பிரச்சனைகள் மனம் முறிவு போன்ற திடீர் நிகழ்வுகள் நடக்கலாம். ஒரு சிலருக்கு ஆரோக்கியத்தில் தொடர்ந்து ஏதேனும் ஒரு பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.
தொழில் ரீதியாக இடம் மாற்றம் செய்வதா? வேண்டாமா என்கின்ற குழப்பமே உங்களுக்கு பெரிய அளவில் ஒரு மன அழுத்தத்தை கொடுத்து விடும். ஆதலால் முடிந்தவரை இறைவழிபாட்டில் மனதை செலுத்தி வந்தால் நிச்சயம் மாற்றம் உண்டு.
தனுசு:
இவர்களுக்கு கேது பெயர்ச்சியானது உங்களை அறியச் செய்வதற்காக நிறைய சவால்களை கொடுக்கும். உடன் பிறந்தவர்கள் குழந்தைகள் வாழ்க்கைத் துணை என்று எல்லோரிடத்திலும் நீங்கள் அவர்களுடைய உண்மை முகத்தை பார்க்கக்கூடிய காலமாக அமையப்போகிறது.
ஆனால் அதற்கு முன்பாக நிறைய சவால்களை நீங்கள் சந்திப்பீர்கள். தொழில் ரீதியாக ஒரு நிலையான தன்மை இல்லாத ஒரு சூழ்நிலை காணப்படும். ஒரு சிலருக்கு திடீர் உடல் ஆரோக்கிய குறைபாடுகள் வரலாம். அதனால் தினமும் நீங்கள் தவறாமல் வீடுகளில் விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் நிச்சயம் இந்த தாக்கமானது குறையும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |