2026: குழந்தை பாக்கியம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி.. எப்படி வழிபாடு செய்வது ?
குழந்தை கண்ணன் அவதரித்த தினமாக நாம் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுகிறோம். கிருஷ்ணஜெயந்தி என்பது மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த தினமாகும். இந்த உலகம் எப்போதெல்லாம் அதர்மம் என்கின்ற கொடியை கையில் எடுக்கிறதோ அதை வேரோடு அழிக்க கிருஷ்ண பகவான் தோன்றுகிறார்.
அந்த வகையில், அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணர் பூலோகத்தில் பிறந்த தினத்தை நாம் கிருஷ்ண ஜெயந்தியாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகின்றோம்.
இந்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் ஸ்ரீமத் கீதையில் உள்ள "தசம ஸ்காந்தம்" படித்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாக இருக்கிறது.

மேலும், இந்த விரதத்தை பின்பற்றி வருகின்ற பொழுது நமக்கு அழகான குழந்தையும் புத்தி கூர்மையுள்ள குழந்தையும் குழந்தை இருப்பவர்களுக்கு குழந்தை நல்ல அறிவோடும் நற் சிந்தனையோடும் வளரக்கூடிய ஒரு பாக்கியத்தை கிருஷ்ண பகவான் அருளுகிறார்.
அதனால்ம், கிருஷ்ண ஜெயந்தி அன்று கணவனும் மனைவியும் இருவராக சேர்ந்து விரதத்தை அனுஷ்டிக்கின்ற பொழுது கிருஷ்ண பகவானுடைய அருளால் ஒரு நல்ல குழந்தை பிறக்கும்.

பகல் முழுவதும் உபவாசம் இருந்து இரவில் கண்ணின் திருநாமத்தை உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்கள் பூஜை செய்யும் கிருஷ்ணர் படம் அல்லது கிருஷ்ணருடைய பொம்மை மீது மடியின் மீது வைத்துக் கொள்வார்கள்.
இவ்வாறு செய்வதால் மழலைபேறு கிடைக்கும் என்பது தீராத நம்பிக்கை. கிருஷ்ணரை அவர்கள் மடியில் வைத்துக் கொள்பவர்கள் பூஜை முடிந்ததும் கொஞ்சம் பால் அல்லது பால் பாயாசத்தை கிருஷ்ணருக்கு ஊட்டி விடுவது போல் பாவனை செய்து அந்த பிரசாதத்தை தம்பதியர் இருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் கிருஷ்ண பகவானுடைய முழு அருளால் புத்திர பாக்கியம் நமக்கு கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |