2026: கிருத்திகை ஸ்பெஷல்.. 12 ராசிகளுக்கும் முருகர் சொல்லும் செய்தி என்ன?
பிரபல டாரோ ரீடர் சாரா அவர்கள் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு முருகப்பெருமான் 12 ராசிகளுக்கும் சொல்லும் சிறப்பு செய்திகளை பகிர்ந்து கொள்கிறார். அதோடு, அவர் பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்ற வழிபாட்டு முறையையும் எளிய ஆன்மீக பரிகாரங்களையும் சொல்லி இருக்கிறார். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
இவர்கள் மனக்கசப்புகள் விலக முருகப்பெருமானுக்கு பூக்களை சமர்ப்பித்து வழிபாடு செய்யலாம்.
ரிஷபம்:
வாழ்க்கையில் அன்பும் திருமண வாழ்க்கையில் காதலும் மலர முருகப் பெருமானை மனதார நம்பி சரண் அடைவது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
மிதுனம்:
இவர்கள் சட்ட சிக்கல் அல்லது தனிப்பட்ட திருமண வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் விலக சிங்கார வேலரை வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

கடகம்:
இவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து நிலையான மாற்றங்கள் கிடைக்க சிறுவாபுரி முருகனை தரிசனம் செய்வது நல்ல பலனை கொடுக்கும்.
சிம்மம்:
உடல் மற்றும் மனரீதியான ஆரோக்கியத்தை பெறுவதற்கு இவர்கள் பழனி முருகனை ஆண்டி கோலத்தில் வழிபாடு செய்வது சிறப்பு.
கன்னி:
இவர்கள் வடபழனியில் இருக்கக்கூடிய சித்தர் பீடத்தில் தியானம் செய்வது என்பது ஒரு பாதுகாப்பான அமைப்பை கொடுக்கும்.
துலாம்:
இவர்கள் மன அழுத்தத்தை போக்குவதற்கு முருகப்பெருமானுக்கு விபூதி அபிஷேகம் செய்வது என்பது ஒரு சிறப்பான பரிகாரமும் மாற்றத்தையும் கொடுக்கும்.
விருச்சிகம்:
வருகின்ற ஆபத்துகளில் இருந்து விலக தினமும் வேல்மாறல் பாராயணம் செய்வது அல்லது கேட்பது நல்ல மாற்றம் கொடுக்கும்.

தனுசு:
முருகப்பெருமானை இவர்களுடைய தாயாக நினைத்து அவர்களுடைய குறைகளை சமர்ப்பித்து வழிபாடு செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
மகரம்:
தினமும் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து பிரணவ மந்திரம் என்கின்ற " ஓம்" என்கின்ற மந்திரத்தை உச்சரித்து வர வாழ்க்கையில் பிரகாசம் உண்டாகும்.
கும்பம்:
உறவுகளில் உங்களுக்கான எல்லைகளை கடைப்பிடித்து அளவுக்கு மீறிய உணர்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.
மீனம்:
இவர்கள் மன அமைதிக்கு சந்தன அலங்கார முருகனை தரிசித்து சந்தன பிரசாதத்தை தினமும் பயன்படுத்தி வருவது நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |