உருவாகம் மகாலட்சுமி ராஜயோகம்.. எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது ?
நவம்பர் 1ஆம் தேதி அன்று சந்திர பகவான் கடக ராசிக்கு இடம் மாறுகிறார். கடக ராசியில் ஏற்கனவே செவ்வாய் பகவான் இருக்கிறார். இதனால் உருவாகக்கூடிய மகாலட்சுமி ராஜயோகம் என்பது மூன்று ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை சேர்க்கப்போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
கன்னி:
இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் பல துறைகளில் வெற்றி வாய்ப்புகள் தேடி வர போகிறது. இந்த ராஜ யோகத்தால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற போகிறது.
புதிய வருமான ஆதாரங்களும், நீண்ட நாட்கள் கைகளுக்கு வராத பணமும் வந்து சேரப்போகிறது. சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். சொத்துக்களில் முதலீடு செய்யும் பொழுது நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

துலாம்:
இவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சுப பலன்களை கொடுக்கப் போகிறது. ஜாதகத்தில் பத்தாவது வீட்டில் செவ்வாய் சந்திரன் இணைக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு வேலை செய்யக்கூடிய இடங்களில் சில நன்மைகள் தேடி வர போகிறது.
வேலையில் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேல் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகமானது இவர்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்க போகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலை நிறைவடையும்.
பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் திறமைக்கேற்ற வாய்ப்புகள் வழங்கப்படும். நீண்ட நாட்கள் சம்பள உயர்வை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல மாற்றம் உண்டாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |