தீபாவளியன்று மகாலட்சுமியின் அருளைப் பெற செய்ய வேண்டிய 6 விஷயங்கள் என்ன?
தீபாவளி திருநாள் என்பது உலகம் முழுதும் வாழக்கூடிய இந்தியர்களால் கொண்டாட கூடிய ஒரு முக்கியமான பண்டிகையாக இருக்கிறது. அந்த வகையில், இருளை நீக்கி மகிழ்ச்சி என்கின்ற ஒளியை கொண்டு வரக்கூடிய பண்டிகையாக இந்த தீபாவளி விளங்குகிறது.
தீமையை நன்மை வெற்றிகொண்ட நாளாக இந்த தீபாவளி திருநாளை கொண்டாடுகிறோம். மேலும், தீபாவளி பண்டிகை புராணங்களுடன் தொடர்பு உடைய நாளாகவும் ஆன்மீகத்தில் லட்சுமி தேவியின் அருளை பெறுவதற்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.
அப்படியாக, 2026 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெறுவதற்கு என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம் .

தீபாவளி அன்று செய்ய வேண்டியவை :
தீபாவளி திருநாள் அன்று கட்டாயமாக நாம் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். அதாவது தலையில் நல்லெண்ணெய் தேய்த்து சீயக்காய் வைத்து குளிக்க வேண்டும். அதேபோல், தீபாவளி அன்று கண்டிப்பாக புதியதாக ஆடை அணிய வேண்டும்.
புதிய ஆடை அணியாமல் கட்டாயமாக இருக்கக் கூடாது. இந்த நாளில் அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று வருவது நல்ல பலன்களை கொடுக்கும்.
வீடுகளில் தேவை இல்லாத சண்டை சச்சரவு இன்றி மகிழ்ச்சியாக எல்லோரும் ஒற்றுமையாக இருப்பது அவசியம்.
இந்த தினத்தில் நீங்கள் ஒருவருக்கு புத்தாடையும் இனிப்பும் வாங்கி வழங்குவதும் தானதர்மம் செய்வதும் சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும். அதேபோல், தீபாவளி அன்று வீடுகளில் லட்சுமி குபேர பூஜை செய்வது ஒரு நல்ல பலன்களை கொடுக்கும். வீடுகளில் செல்வ செழிப்பை அவை உண்டாக்கும்.

தீபாவளி அன்று கண்டிப்பாக செய்யக் கூடாதவை:
தீபாவளி பண்டிகை என்பது தீபங்களின் திருநாளாகும். இந்த தினத்தில் நாம் வீட்டை இருளாக வைத்திருக்கக் கூடாது.
இந்த தீபாவளி திருநாள் அன்று ஒருவருக்கு நாம் பரிசாக கொடுக்கும் பொழுது தோல் தொடர்பான பெல்ட், லெதர் பேக் போன்ற தோலால் செய்த எந்த பொருட்களையும் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
இந்த நாட்களில் யாரையும் மனம் வேதனை படும்படி நடந்து கொள்ளாதீர்கள். இந்த நாட்களில் பெண்கள் அழுக்கு ஆடைகளுடன் சுத்தமில்லாமல் இருப்பதும் கூடாது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |