2026 மகாளய அமாவாசை: திதி கொடுப்பதற்கு உகந்த நேரம் எது?

By Sakthi Raj Oct 10, 2026 06:19 AM GMT
Report

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் ஆண்டுதோறும் வருகின்ற ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்கு புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை நாம் மகாளய அமாவாசை என்று சொல்வோம். பித்ருபட்சம் என்பது நமது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து நன்றி செலுத்தக்கூடிய 16 நாட்கள் ஆகும்.

மேலும், மகாளய அமாவாசையில் இந்த 16 நாட்களும் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது வழக்கம்.

இந்த நேரத்தில் மக்கள் அவர்களுடைய முன்னோர்களை நினைத்து தர்ப்பணம், பிண்டம் முன்னோர்களை போற்றுதல் தர்மம், பிராமண விருந்து, பஞ்சபலி போன்றவற்றை செய்வது உண்டு.

2026 மகாளய அமாவாசை: திதி கொடுப்பதற்கு உகந்த நேரம் எது? | 2026 Mahalaya Amavasya Best Time For Tarpanam

மகாளய அமாவாசை: முன்னோர்கள் நமக்கு சொல்லும் செய்தி என்ன ?

மகாளய அமாவாசை: முன்னோர்கள் நமக்கு சொல்லும் செய்தி என்ன ?

மேலும், இந்த காலகட்டங்களில் முன்னோர்கள் அவர்களுக்கு படைக்கப்பட்ட பிரசாதங்களால் மனம் நிறைந்த அந்த சந்ததியினருக்கு ஆசிர்வாதமும் அருள் புரிவதாக நம்பப்படுகிறது.

அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு மகாளய அமாவாசை செப்டம்பர் 27ஆம் தேதி பித்ரு பட்சம் துவங்கி மகாளய அமாவாசை இன்று அக்டோபர் பத்தாம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நம்முடைய ஊரில் ஒரு பழமொழி ஒன்று உண்டு.

மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்று. மேலும், புராணங்களில் வசிஷ்ட மகரிஷி, தசரதர், துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், பகவான் ராமர், தர்மர் ஆகியோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றது.

இன்று நாம் இறைவனுடைய அருளால் ஒரு குடும்பத்தில் பிறந்து அவர்களுடைய புண்ணியம் மற்றும் அவர்களுடைய சில நலன்களை அனுபவிக்க கூடிய நிலையில் இருக்கின்ற பொழுது நாம் அவர்களுக்குரிய மரியாதையை கட்டாயம் செலுத்த வேண்டும். மேலும், இந்த மகாளய அமாவாசை காலகட்டம் எப்பேர்பட்ட பித்ரு சாபத்தையும் நீக்கக்கூடியது.

2026 மகாளய அமாவாசை: திதி கொடுப்பதற்கு உகந்த நேரம் எது? | 2026 Mahalaya Amavasya Best Time For Tarpanam

2026: நவம்பர் 11 உதயமாகும் புதன்.. எந்த ராசிகளுக்கு திருப்பங்கள் காத்திருக்கிறது?

2026: நவம்பர் 11 உதயமாகும் புதன்.. எந்த ராசிகளுக்கு திருப்பங்கள் காத்திருக்கிறது?

அதேபோல், இந்த தர்ப்பணம் கொடுக்கும் பொழுது கொடுக்கக்கூடிய இடம் மிகவும் முக்கியமாக பார்க்க வேண்டும். ஓடுகிற நீர் இருக்கும் இடத்தில் தான் நம் தர்ப்பணம் செய்ய வேண்டும். எனவே ஆற்றங்கரை அல்லது கடற்கரையை தேர்ந்தெடுப்பது நல்லது.

திதி கொடுக்க உகந்த நேரம்:

இன்று தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரமாக காலை 6 மணியிலிருந்து ஒரு மணி வரை இருக்கிறது. ராகு காலம் மற்றும் எமகண்ட நேரத்தை தவிர்த்து கொள்ளலாம்.

பெரும்பாலும் அதிகாலை 7:00 மணி வரை தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பானது. தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் நிச்சயம் அன்னதானம் செய்து முன்னோர்களை வழிபாடு செய்யலாம்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US