2026 மகர சங்கராந்தி தினத்தில் நடக்கும் 3 சுப யோகங்கள்.. ராஜயோகம் யாருக்கு?
2026 ஆம் ஆண்டு கொண்டாடப்படும் மகர சங்கராந்தி தினத்தில் மூன்று சுப யோகங்கள் உருவாகிறது. சூரியன் உத்திராயணத்தை நோக்கி நகரத் தொடங்குகிறது. ஆதலால் மூன்று சுபயோகங்கள் உருவாகி குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை கொடுக்க இருக்கிறது.
அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு உருவாகக்கூடிய இந்த ராஜயோகத்தால் பெயர் புகழ் பெறக்கூடிய அற்புதமான காலமாக இருக்க போகிறது. தொழில் ரீதியாக நீங்கள் உங்களுடைய திறமையை வெளிப்படுத்தி உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் கவனத்தையும் பெறப்போகிறீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு மனதில் எதையும் சமாளித்து கொள்ளலாம் என்ற தைரியம் பிறக்கும். தொழில் ரீதியாக நிறைய உழைப்புக்கு போட்டு லாபம் பெறுவீர்கள்அதோடு புதிய வாய்ப்புகள் இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் தேடி வர போகிறது. மனைவி வழியில் நல்ல ஆதரவு கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த சுபயோகமானது இவர்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொடுக்கப் போகிறது. புதிய வேலை அதுவும் நினைத்த இடத்தில் வேலை கிடைக்க கூடிய பாக்கியம் கிடைக்கும். உடல் நிலையில் நீண்ட நாட்களாக தொந்தரவு சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும்.
மகரம்:
மகர ராசியினருக்கு சுபயோகமானது இவர்களுக்கு பொருளாதாரத்தில் சந்தித்து வந்த சிக்கலை போக்கி கடனை அடைக்க கூடிய ஒரு பாக்கியத்தை கொடுக்க போகிறது. இழந்த அவமானத்தையும் மரியாதையும் மீண்டு பெறப் போகிறீர்கள். மனதளவிலும் உடலளவிலும் நீங்கள் புத்துணர்ச்சி அடைந்து மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய காலகட்டமாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |