இரும்பு போல் எதையும் தாங்கும் இதயம் கொண்ட ராசிகள்.. யார் தெரியுமா?

By Sakthi Raj Jan 09, 2026 07:21 AM GMT
Report

 மனிதர்கள் யாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரும் பல்வேறு குண நலன்களை பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு இடத்தில் பிரச்சனை என்று வந்துவிட்டால் அதை சமாளிக்க முடியாமல் உடனே அமைதியை தழுவி விடுவார்கள்.

காரணம் மனதில் பயம், எதையும் தாங்கி கொள்ள கூடிய பக்குவமும் மன வலிமையையும் இல்லாததே காரணம் ஆகும். ஆனால் ஒரு சிலர் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் உடனடியாக அடுத்து என்ன செய்வது என்று தெளிவாக யோசித்து நிதானமாக செயல்படக்கூடிய தன்மையைப் பெற்றிருப்பார்கள்.

இதற்கு அவர்களுடைய ராசி அமைப்பு தான் காரணமாக இருக்கிறது. அப்படியாக எந்த ராசியினர் எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் இரும்பு போல் அதை தாங்கிக் கொள்ளக்கூடிய இதயம் கொண்ட ராசிகள் என்று பார்ப்போம்.

இரும்பு போல் எதையும் தாங்கும் இதயம் கொண்ட ராசிகள்.. யார் தெரியுமா? | Zodiac Sign Who Have Strong Personality

தை அமாவாசை எப்பொழுது? பித்ரு தோஷம் விலக செய்ய வேண்டிய 5 பரிகாரங்கள்

தை அமாவாசை எப்பொழுது? பித்ரு தோஷம் விலக செய்ய வேண்டிய 5 பரிகாரங்கள்

 

கும்பம்:

கும்ப ராசியினர் ஒரு பிரச்சனைக்கு முன்பாக அவர்கள் எவ்வளவு குழப்ப நிலையில் இருந்தாலும் பிரச்சனை என்று வந்த பொழுது இவர்கள் எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் சரியாக பதட்டமின்றி ஒரு முடிவெடுக்கக்கூடிய ஒரு பண்பை கொண்டு இருப்பார்கள்.

அதை போல் இவர்களிடத்தில் ஒரு ஆழ்ந்த அமைதியை நாம் எப்பொழுதும் பார்க்க முடியும். எல்லா விஷயங்களையும் வித்தியாசமாக அணுக கூடிய ஒரு கண்ணோட்டத்தை பெற்று இருப்பார்கள்.

மகரம்:

மகர ராசியினருக்கு பயம் என்பது இருக்காது. இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் தைரியமாக எதிர்கொண்டு விடலாம் என்ற ஒரு தன்மை இருக்கும். அதை போல் இவர்கள் யாருக்கும் அடிபணிந்து போகக்கூடிய ஒரு மனநிலை கொண்டிருக்க மாட்டார்கள்.

எவ்வளவு இக்கட்டான நிலைகளிலும் இவர்கள் மனதை குழப்பி நமக்கு சாதகமாக ஒரு பதிலை அவர்களிடம் இருந்து நாம் வாங்கி விட முடியாது. அதேபோல் எவ்வளவு பெரிய இன்னல்கள் வந்தாலும் அது கடந்து போராடி சாதிக்கும் வலிமை இவர்களுக்கு உண்டு.

தீராத வறுமையால் கடன் பிரச்சனையா? ஒரு முறை இங்கு சென்றால் மாற்றம் நிச்சயம்

தீராத வறுமையால் கடன் பிரச்சனையா? ஒரு முறை இங்கு சென்றால் மாற்றம் நிச்சயம்

கன்னி:

புதன் பகவானுடைய ஆதிக்கத்தை பெற்ற கன்னி ராசியினர் சிறுவயதிலிருந்து நிறைய துன்பங்களை சந்தித்திருப்பார்கள். இவர்களுக்கு துன்பங்களை சந்தித்து அந்த துன்பத்துடன் வாழ்வதற்கு ஒரு பழக்கம் ஒரு சமயத்திற்கு பிறகு வந்துவிடும்.

சில நேரங்களில் இவர்களுக்கு வருகின்ற ஆபத்து கூட ஆபத்து என்று புரியாத அளவிற்கு ஒரு இயல்பான நிலையில்தான் இவர்கள் பல நேரங்கள் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய நிலையில் இருப்பார்கள். எவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருந்தாலும் இதுவும் கடந்து போகக் கூடியது தான் என்ற ஒரு மனவலிமை இவர்களிடத்தில் எப்பொழுதும் இருக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US