தை அமாவாசை எப்பொழுது? பித்ரு தோஷம் விலக செய்ய வேண்டிய 5 பரிகாரங்கள்
நம் முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு மிகவும் அவசியம். அப்படியாக அவர்களை வழிபாடு செய்வதற்கு ஒவ்வொரு மாதமும் சிறந்த மாதம் என்றாலும் அமாவாசை மற்றும் தை மாதங்களில் வரக்கூடிய அமாவாசை நாட்களில் அவர்களை வழிபாடு செய்வது மிகச் சிறந்த பலனை கொடுக்கும் என்கிறார்கள்.
மேலும், தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசைக்கு மௌனி அமாவாசை அல்லது மா ஹிஅமாவாசை என்று ஒரு பெயர் உண்டு. இந்த தினத்தில் நாம் கங்கையில் நீராடினால் ஜாதகத்தில் உள்ள தோஷம், சாபம் போன்ற எல்லா விஷயமும் நீங்கும் என்பது ஐதீகமாக இருக்கிறது.
அப்படியாக 2026 ஆம் ஆண்டு வருகின்ற முதல் அமாவாசையான தை அமாவாசை உத்திராயண காலத்தில் வருகின்றது என்பதால் இது ஒரு தனி சிறப்பு பெற்றிருக்கிறது.
அதாவது தேவர்களுக்கு காலை பொழுதாக கருதப்படும் தை மாதத்தில் இந்த அமாவாசை வருவதால் பித்ருக்களால் ஏற்படும் சாபம், கோபம், துன்பம் எல்லாம் விலகுவதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பாக இருக்கிறது. அதனால் இந்த நாளில் நாம் தவறாமல் ஒரு சில பரிகாரங்களை செய்து முன்னோர்களை வழிபாடு செய்தால் நிச்சயம் நல்ல பலனை பெறலாம்.

தை அமாவாசை அன்று செய்ய வேண்டிய 5 பரிகாரங்கள்:
1. இந்த 2026 ஆம் ஆண்டு தை அமாவாசை ஜனவரி 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகின்றது. இந்த நாளில் முடிந்தவர்கள் நீர் நிலைகள். கடற்கரைகள் நதிக்கரைகளில், நீராடி அவர்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும் தான தர்மங்கள் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
2. சாஸ்திர ரீதியாக இந்த தை அமாவாசையில் முன்னோர்கள் அவர்களுடைய சந்ததியினரை காண வருவார்கள். அதனால் இந்த நாளில் அவர்களுக்கு பிடித்த உணவுகள் படைத்து அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெற அற்புதமான வாய்ப்பு என்பதால் உணவு படைத்து வழிபாடு செய்வது அவசியம்.
3. தை அமாவாசை அன்று மாலை நேரத்தில் அரச மரத்திற்கு கீழ் கடுகு எண்ணெயில் ஒரு தீபம் ஏற்றுவது மிக அற்புதமான பலனை பெற்றுக் கொடுக்கும். அரச மரத்தில் தான் பிரம்மா, விஷ்ணு. சிவன் ஆகிய மூவரும் அவர்களின் பத்தினிகளும் வாசம் செய்வதாக கருதப்படுகிறது.
அதனால் இங்கு நாம் தீபம் ஏற்றுவது முன்னோர்களுடைய ஆன்மாவிற்கும் ஒரு நல்ல அமைதியை பெற்றுக் கொடுப்பதோடு அவர்களுடைய ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்கும் என்கிறார்கள்.

4. தை அமாவாசை நாளில் கட்டாயம் நாம் முடிந்த அளவிற்கு இரண்டு நபருக்காவது தானம் வழங்க வேண்டும். ஏழை எளியவர்கள் வயதானவர்கள் அவர்களுக்கு ஏதேனும் முடிந்த உதவிகள் செய்வது நிச்சயம் ஒரு நல்ல கர்ம பலனை கொடுக்கும்.
5. தை அமாவாசை தினத்தன்று மேற்கண்ட விஷயங்கள் எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் மனதார முன்னோர்களை மனதில் நினைத்துக் கொண்டு அவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபாடு செய்தால் அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு நமக்கு ஆசிர்வாதம் வழங்குவார்கள்.
பித்ரு தோஷம் வர காரணம்:
நம் முன்னோர்களை மறவாமல் வாழ வேண்டும். அவர்கள் வழி வந்தவர்கள் நாம் என்பதை கருத்தில் கொண்டு எப்பொழுதும் நன்றி செலுத்தி எப்பொழுதும் அவர்களை மனதில் நினைத்தவாறு இருக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவே இவ்வாறான வழிபாடுகள் நாம் செய்ய வேண்டும். இது நன்றி மறவாத ஒரு செயல் என்றும் சொல்லலாம்.
நாம் எங்கு இதை மறந்து செல்கின்றோமோ அங்கு தான் அவை பாவமாகவும், தோஷமாகவும் வருகிறது. ஆதலால் நிச்சயம் முன்னோர்களை மறக்காமல் தை அமாவாசையில் வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய குடும்பத்தில் குழந்தைகள் பெரியவர்கள் என்று யாருக்கு ஆரோக்கிய குறைபாடுகள் பணகஷ்டம் இருந்தாலும் உடனடியாக விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |