2026-ல் வரப்போகும் சனிப்பெயர்ச்சி.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார்?

By Sakthi Raj Feb 24, 2026 08:34 AM GMT
Report

ஜோதிடத்தில் சனிபகவான் நீதிமானாக விளங்ககூடியவராக இருக்கிறார். மேலும் மெதுவாக நகரக்கூடிய கிரகமும் சனி பகவான் தான். சனி பகவான் ஒரு ராசியில் நுழைந்தால் அவர் இரண்டரை காலம் அங்கேயே இருக்கிறார். பிறகு படிப்படியாக அவருடைய பார்வையை வேறு இடத்திற்கு மாற்றுவதால் அவருடைய தாக்கம் குறைவாக மாறுகிறது.

அதோடு, நவகிரகங்களில் சனி பகவான் தான் எல்லோரையும் அச்ச படுத்த கூடியவராக இருக்கிறார். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு வரப்போகிற சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் நன்மை தீமை பெறப் போகிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

2026-ல் வரப்போகும் சனிப்பெயர்ச்சி.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார்? | 2026 March Sani Peyarchi Palangal

2026 மார்ச் மாதம் இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப்போகிறதாம்

2026 மார்ச் மாதம் இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப்போகிறதாம்

மாசி மாதம் 22 ஆம் தேதி அதாவது மார்ச் மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 7:56 மணியளவில் பூரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதத்தில் மீன ராசியில் வாக்கிய கணித ரீதியாக சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் 24.4.2028 ஆம் தேதி வரை இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதனால் அவருடைய பார்வை ரிஷபம், கன்னி, தனுசு ஆகிய வீடுகளில் விழுவதால் இந்த ராசிக்காரர்கள் நிச்சயம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த சனி பெயர்ச்சி ஆனது சிம்ம ராசிக்கு அஷ்டமத்து சனியாகவும், தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனியாகவும் வருகிறது.

அதேசமயம், மகர ராசிக்கு ஏழரை சனி முற்றிலும் முடிவுக்கு வருகிறது. கன்னி ராசிக்கு கண்டக சனி விலகுகிறது. விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம விலகுகிறது. மேலும், கும்ப ராசிக்கு குடும்ப சனியும், மீன ராசிக்கு ஜென்ம சனியும் தொடங்குகிறது.

2026-ல் வரப்போகும் சனிப்பெயர்ச்சி.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார்? | 2026 March Sani Peyarchi Palangal

இந்த இரண்டு ராசிக்காரர்கள் திருமணம் செய்தால் மகிழ்ச்சியாக வாழ்வார்களாம்

இந்த இரண்டு ராசிக்காரர்கள் திருமணம் செய்தால் மகிழ்ச்சியாக வாழ்வார்களாம்

அதோடு, மேஷ ராசிக்கு விரய சனியாகி, ஏழரை சனி ஆரம்பமாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.

இதனால் இவர்கள் சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபாடு செய்வதும் எள் தீபம் ஏற்றுவதும் நல்ல பலன் கொடுக்கும். இந்த சனியின் சஞ்சார காலத்தில் மூன்று முறை குரு பெயர்ச்சி நடக்க இருக்கிறது. அதேபோல் ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US