சுக்கிரன் சனி இணைவால் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை காத்திருக்கிறதாம்
ஜோதிடத்தில் சுக்கிரன் மற்றும் சனி இருவரும் நட்பு கிரகமாக இருக்கிறார்கள். அந்த வகையில் இரு கிரகமும் இணைந்து மிகப்பெரிய அளவில் ஒரு நன்மையான தாக்கத்தை உண்டு செய்ய இருக்கிறார்கள்.
அதாவது தற்பொழுது சனி பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் தேதி ஹோலி பண்டிகை ஒரு நாள் முன்னதாக சுக்கிர பகவான் மீன ராசியில் இருக்கக்கூடிய சனி ப பகவானுடன் இணைகிறார். இதன் தாக்கம் மிகப்பெரிய அளவில் சில ராசிகளுக்கு நன்மையை செய்யப்போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு சுக்கிரன் சனி சேர்க்கை பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகளை சரி செய்யப்போகிறது. திருமண வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும். வேலை தொடர்பாக நீங்கள் எடுக்கின்ற அனைத்து காரியமும் ஒரு நல்ல முடிவை பெறும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் உங்களுக்கு ஒரு முக்கிய பொறுப்புகள் தேடி வர காத்திருக்கிறது.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கையானது இவர்களுக்கு மன ரீதியாக இருந்து வந்த குழப்பத்தை சரி செய்ய போகிறது. குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். சமுதாயத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரப் போகிறது. வேலை தொடர்பாக இருந்து வந்த பளு விலகும். வீடுகளில் முக்கிய சொத்துக்கள் மற்றும் ஆவணங்களில் இருந்து வந்து பிரச்சனைகள் நல்ல முடிவை பெறும்.
துலாம்:
துலாம் ராசிக்கு சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கையானது இவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை கொடுக்கப்படுகிறது . இந்த காலகட்டங்களில் உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். சமுதாயத்தில் கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரப்போகிறது. வியாபாரத்தில் கடின உழைப்பால் மிகப்பெரிய அளவில் லாபத்தை பெற போகிறீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |