வாஸ்து: அதிர்ஷ்டம் பெறுக வீட்டில் வைக்க வேண்டிய 5 முக்கியமான ஓவியங்கள்
ஜோதிடத்தில் வாஸ்து முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம் வாஸ்துவும் நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கு கை கொடுப்பதாக அமைகிறது.
அந்த வகையில் வாஸ்து ரீதியாக ஒரு நல்ல அதிர்வலைகள் உண்டாகவும் அதிர்ஷ்டம் பெருகவும் எப்பொழுதும் ஒரு நேர்மறையான சக்திகள் சூழ்ந்திருக்கவும் நம் வீடுகளில் 5 முக்கியமான படங்கள் அல்லது ஓவியங்கள் வைப்பது நல்லது என்று சொல்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.

1. நீர்வீழ்ச்சி:
வீடுகளில் நீர்வீழ்ச்சி அல்லது நதியின் படங்கள் வைக்கும் பொழுது பொருளாதாரத்தில் ஒரு நல்ல முன்னேற்றம் கிடைப்பதோடு தடையில்லாத செல்வம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் நம் வீட்டில் உள்ள தடைகளை அவை நீக்கி நம் வீட்டை நல்ல மகிழ்ச்சியாக வைக்க உதவுகிறது. இந்த படத்தை வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைப்பதால் இன்னும் கூடுதல் சிறப்பை பெறலாம்.
2.ஏழு குதிரைகளின் படம்:
வாஸ்துவில் ஏழு குதிரைகள் ஓடுகின்ற படத்தை நம் வீடுகளில் வைக்கும் போது அவை நல்ல அதிர்ஷ்டத்தை நமக்கு பெற்றுக் கொடுக்கிறது. மேலும் இவை நமக்கு மன வலிமையும், பொருளாதாரத்தில் முன்னேற்றமும், செய்கின்ற காரியங்களில் நல்ல வளர்ச்சியையும் கொடுக்கிறது. இந்த படத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைப்பது நல்லது.
3. அதிர்ஷட மரம்:
வாஸ்து ரீதியாக வீடுகளில் தங்க நாணயம் போன்ற வரைபடங்கள் அல்லது தங்க நாணயம் போன்ற அதிர்ஷ்ட மரத்தின் ஓவியங்களை வைக்கும் பொழுது நம் வீடுகளில் பொருளாதாரம் சிறப்பாக அமைவதோடு அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். இந்த படத்தை வடக்கு அல்லது தெற்கு திசையில் வைக்கும் பொழுது கடன் தொல்லை விலகும்.
4. சூரியன் உதிக்கும் படங்கள்:
வீடுகளில் சூரியன் உதிப்பது போல் படம் அல்லது ஓவியங்கள் வைக்கும் பொழுது நமக்கு புதிய வாய்ப்புகளும், அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் கிடைக்கும். அதைவிட முக்கியமாக இந்த படத்தை சரியான திசையில் வைக்கும் பொழுது நமக்கு சிறந்த ஆளுமை பண்பும் தெளிவாக யோசித்து முடிவு எடுக்கக்கூடிய பக்குவமும் கிடைக்கிறது. அப்படியாக இந்த படத்தை கிழக்கு திசையில் வைப்பது உகந்தது ஆகும்.
5. இயற்கை ஓவியங்கள்:
வீடுகளில் இயற்கை சூழ்ந்த ஓவியங்கள் மற்றும் மயில் தோகை விரித்து ஆடுவது போல் ஓவியங்கள் வைக்கும் பொழுது வீடுகளில் மகிழ்ச்சி உண்டாகுவதோடு மனதில் எப்பொழுதும் புத்துணர்ச்சியான நிலை இருக்கும். இந்த படத்தை கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்கும் பொழுது வீட்டில் எப்பொழுதும் அதிர்ஷ்டம் சூழ்ந்து இருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |