2026: கேது பார்வையால் மே 22 முதல் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

By Sakthi Raj May 12, 2026 11:00 AM GMT
Report

ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதக்கூடிய ராகு மற்றும் கேது பகவான் ஒருவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கிறார். அந்த வகையில், மே 22 ஆம் தேதி சிம்ம ராசியில் சந்திர பகவான் நுழைகிறார்.

மேலும், சிம்ம ராசியில் ஏற்கனவே கேது பகவான் இருப்பதால் கேது மற்றும் சந்திரன் சேர்க்கை கிரகண யோகத்தை உருவாக்க இருக்கிறது. ஆக, கேது சந்திரன் சேர்க்கையால் குறிப்பிட்ட சிலர் ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

2026: கேது பார்வையால் மே 22 முதல் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் | 2026 May 22 Kethu Moon Conjuction In Simam Palan

காமாட்சியம்மன் கோயிலுக்கு போறீங்களா? அப்போ இந்த 5 நபரை தரிசிக்க தவறாதீர்கள்

காமாட்சியம்மன் கோயிலுக்கு போறீங்களா? அப்போ இந்த 5 நபரை தரிசிக்க தவறாதீர்கள்

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு கேது மற்றும் சந்திர சேர்க்கையால் இவர்கள் இந்த காலகட்டங்களில் மன அழுத்தத்தை சந்திக்க நேரலாம். குடும்பத்தினர் இவர்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு அளிக்காத ஒரு நிலையை காணலாம்.

அதனால் இவர்கள் தேவையில்லாமல் வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்த்தால் குடும்பத்தில் ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகள் இருந்து விடுபடலாம். அதேபோல் வேலை செய்யும் இடங்களில் நீங்கள் அதிகாரிகளிடம் தேவையில்லாத பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு கேது சந்திரன் சேர்க்கையால் இவர்கள் வேலையில் சற்று கவனமாக செயல்பட வேண்டியதாக இருக்கிறது. பொருளாதாரத்தில் சில சிக்கல்களை சந்திக்க நேரலாம். பங்கு சந்தையில் சில இழப்புகளையும் நீங்கள் பெறலாம்.

திடீர் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது அவசியம். இந்த காலகட்டங்களில் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கோபத்தை விடுத்து பொறுமையை காப்பது அவசியம்.

உங்கள் ஜாதகத்தில் ராகு எந்த இடத்தில் இருக்கிறார்.. அதற்கான பலன் இதோ

உங்கள் ஜாதகத்தில் ராகு எந்த இடத்தில் இருக்கிறார்.. அதற்கான பலன் இதோ

 

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கேது மற்றும் சந்திரன் சேர்க்கை இவர்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சில பின்னடைவுகளை கொடுக்கலாம். திடீர் மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். வாழ்க்கையில் ஒரு விரக்தி ஏற்படக்கூடிய நிலை உருவாகும்.

வாழ்க்கை துணை உங்களை விட்டு சிறிது காலம் வெளியூர் பயணம் சென்று வேலை பார்க்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். வீண் பண செலவுகளை சந்திப்பீர்கள்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US