2026: இன்று நடக்கும் குரு பெயர்ச்சியால் டாப் யோகத்தை பெறக்கூடிய 3 ராசிகள்

By Sakthi Raj May 26, 2026 05:58 AM GMT
Report

ஜோதிடத்தில் குரு பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். அவர் 26. 5 2026 ஆம் தேதி அன்று பகல் 11 மணி அளவில் குருபகவான் மிதுன ராசியில் இருந்து அவருடைய உச்ச ராசியான கடக ராசிக்கு இடம் மாறுகிறார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் இந்த பெயர்ச்சி நடைபெறுகிறது. மேலும், குரு பகவானுடைய விசேஷ பார்வை ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வையில் விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளின் மீது விழுகின்றன.

இது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகவும் நன்மைகளை கொடுப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியாக இன்று நடக்கக்கூடிய குரு பெயர்ச்சியால் எந்த ராசியில் இருக்கு அமோகமான யோகம் என்று பார்ப்போம்.

2026: இன்று நடக்கும் குரு பெயர்ச்சியால் டாப் யோகத்தை பெறக்கூடிய 3 ராசிகள் | 2026 May 26 Guru Peyarchi Brings Luck For 3 Zodiac

இன்றைய குரு பெயர்ச்சி சிறப்பு ராசி பலன்கள் (26-05-2026)

இன்றைய குரு பெயர்ச்சி சிறப்பு ராசி பலன்கள் (26-05-2026)

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியானது இவர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். இவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை கொடுப்பார்கள். குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் கருத்து மோதல் இவையெல்லாம் விலகும்.

திடீர் என்று வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய குழந்தைகளால் பெருமை உண்டாகும். குடும்பத்தில் பொன் பொருள் ஆபரண சேர்க்கை நடக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி காலகட்டத்தில் இவர்களுக்கு கடின உழைப்பால் மிகப்பெரிய அளவில் உயரத்தை தொடக்கூடிய அமைப்பு உருவாக போகிறது. அலுவலகத்தில் இவருடைய விடாமுயற்சியாலும் உழைப்பாலும் வெற்றியும் அவர்களுக்கான தனி அங்கீகாரத்தையும் பெறப் போகிறார்கள். இருப்பினும் இவர்கள் பணத்தை கையாளும் பொழுது கவன சிதறல் வராமல் பார்த்துக் கொள்வது. பழைய கடன்கள் உங்களுக்கு மீண்டும் கைகளுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

நாய்களுக்கு மரணம் நெருங்கும் பொழுது இப்படி நடந்து கொள்ளுமாம்.. உஷாராக இருங்கள்

நாய்களுக்கு மரணம் நெருங்கும் பொழுது இப்படி நடந்து கொள்ளுமாம்.. உஷாராக இருங்கள்

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் உயர்த்தை தொடக்கூடிய காலகட்டமாகும். உங்களின் திறமை வெளிப்படும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலையும் மகிழ்ச்சியான அமைப்பு உண்டாக்கும்.

உறவுகள் இடையே உங்களுடைய செல்வாக்கு உயரும். இருப்பினும் உணவு விஷயங்களில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டு. பண வரவுகளை சரியாக கணக்கு பார்த்து சேமிப்பது அவசியம். இந்த காலகட்டங்களில் உங்களுக்கு நம்பிக்கையானவர்கள் உங்களுடன் நின்று சில முக்கியமான பணிகளை செய்து முடிக்க உதவியாக இருப்பார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US