2026: புதன் பெயர்ச்சியால் குபேர யோகம் பெறப்போகும் 3 முக்கிய ராசிகள்

By Sakthi Raj May 06, 2026 11:32 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகங்களுடைய மாற்றமும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படியாக எழுத்து, அறிவு, ஆற்றல் போன்றவற்றுக்கு காரணமாக இருக்கக்கூடியவர் புதன் பகவான். இவர் தற்பொழுது மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார்.

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான். இதனால் புதன் கூர்மையுடன் வேகமாகவும் செயல்படுவார். இந்த காலகட்டங்களில் குறிப்பிட்ட சில ராசியினருக்கு குபேரராஜ யோகம் ஏற்படக்கூடும் என்று நம்பப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026: புதன் பெயர்ச்சியால் குபேர யோகம் பெறப்போகும் 3 முக்கிய ராசிகள் | 2026 May Mesham Puthan Peyarchi Prediction

தீராத கடன் பிரச்சனையா? குபேரர் அருளை பெற ஏற்ற வேண்டிய தீபம்

தீராத கடன் பிரச்சனையா? குபேரர் அருளை பெற ஏற்ற வேண்டிய தீபம்

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த சஞ்சாரத்தால் இவர்களுக்கு நிர்வாக திறன் அதிகரிக்க போகிறது. கடின உழைப்பிற்கு ஏற்ற பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். சமுதாயத்தை நல்ல மதிப்பும் உங்களுக்கான அங்கீகாரமும் கிடைக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு வீடு வாகனம் வாங்க கூடிய யோகம் அல்லது வீடு வாகனம் வாங்கக்கூடிய சிந்தனையும் அதற்குரிய முயற்சிகள் எடுக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்த வேலை நல்ல முடிவுக்கு வரும். கலை மற்றும் படைப்பு துறையில் இருப்பவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவு திறந்து இருக்கிறது என்றே சொல்லலாம். வியாபாரத்தில் திடீர் லாபம் நீண்ட நாட்கள் கைகளுக்கு வராத சொத்துக்கள் கைகளுக்கு வந்து சேரும். நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உள்ள மன கசப்புகள் விலகும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US