2026: மே 16 சனி அமாவாசையில் நடக்கும் டபுள் பெயிற்சி..3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்
ஜோதிடத்தில் சனி அமாவாசை தினத்தில் இரட்டை சந்திரன் பெயர்ச்சி நடக்க இருக்கிறது. அதாவது மே 16ஆம் தேதி இரட்டை சந்திரன் பெயர்ச்சி நடக்கிறது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் அவர்களுக்கு வாழ்க்கையில் புதிய திருப்பமும் உண்டாகிறது.
மேலும், ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகமாக சனி பகவான் இருக்கிறார். அந்த வகையில் மே 16ஆம் தேதி அமாவாசை வருகிறது. அன்றைய தினம் சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சந்திரனின் இரட்டை பெயர்ச்சி நடப்பதால் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை 12 ராசிகளும் சந்திக்க இருக்கிறார்கள்.
அதாவது, மே 16ஆம் தேதி மாலை 5. 29 மணிக்கு சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். பின்னர் 10.49 மணிக்கு ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி அமாவாசை நாளில் சந்திரனின் இரட்டைப் பெயர்ச்சி 12 ராசிகளுக்கு பெரிய தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் யோகத்தை உள்ளது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி அமாவாசை நாளில் நடக்கக்கூடிய இந்த இரட்டை பெயர்ச்சி இவர்களுக்கு வாழ்க்கையில் நேர்மறையான திருப்பத்தை கொடுக்க போகிறது. தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உருவாகும்.
உங்களுக்கு உடல் ரீதியாக இருந்து வந்த சிறு சிறு உபாதைகளில் இருந்து விடுபடுவீர்கள். உயர் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுகள் கிடைக்கும். வெளிநாடு பயணம் செல்வதற்கான யோகம் உருவாகும்.
கும்பம்:
சனி அமாவாசை நாளில் நடக்கும் சந்திரனின் பெயர்ச்சியானது கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் பிரகாசமான வாழ்க்கையை கொடுக்க உள்ளது. உடன் பிறந்தவர்களால் சந்தித்து வந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு அவர்களின் ஆதரவு கிடைக்கும்.
புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் அதைப் பற்றிய சிந்தனையும் மேலோங்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தினரிடம் அதிக நேரத்தில் செலவிடுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு சனி அமாவாசை நாளில் நடக்க இருக்க கூடிய சந்திரனின் இரட்டை பெயிற்சியானது இவர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கிறது. நீண்ட நாட்களாக தடைபட்டு இருந்த காரியம் இவர்கள் கைகளுக்கு வந்து சேரும்.
புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். ஆன்மீக ரீதியாக நம்பிக்கையும் ஆன்மீகப் பயணங்களிலும் ஈடுபடுவீர்கள். உங்களுக்கு அமாவாசை நாளில் அதிர்ஷ்டமும் பொருளாதார முன்னேற்றமும் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |