2026: நவம்பர் 2 புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது

Report

புதன் பகவான் நீண்ட காலமாக வக்ர நிலை, வக்ர நிவர்த்தி என துலாம் ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். அவர் நவம்பர் இரண்டாம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு நகர இருக்கிறார். புதன் பெயர்ச்சி காரணமாக ஒரு சில ராசிகளுக்கு வாழ்க்கையில் மங்களகரமான நிலை அமையப்போகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

2026: டிசம்பர் 12, 18 தேதிகளில் கவனம்..சிம்ம ராசிக்கான டிசம்பர் மாத பலனும் பரிகாரமும்

2026: டிசம்பர் 12, 18 தேதிகளில் கவனம்..சிம்ம ராசிக்கான டிசம்பர் மாத பலனும் பரிகாரமும்

மிதுனம்:

மிதுன ராசியில் அதிபதி புதன் பகவான். இவர்களுக்கு ஆறாம் வீட்டில் புதன் இருப்பதால் நல்ல பலன்களை வாரி வழங்க இருக்கிறார். இந்த காலகட்டங்களில் உடல்நல தொந்தரவுகள் இருந்தால் அவை விலகும். நீண்ட நாட்கள் செய்து வந்த வியாபாரம், தொழில் தொடர்பான எதிரிகளை சமாளித்து மிகப்பெரிய அளவில் முன்னேற்றங்களை பெறக்கூடிய காலகட்டமாக அமையப்போகிறது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் வழியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கப் போகிறது. வேலை செய்யும் இடங்களில் பாராட்டை பெறுவீர்கள். புதிய வருமானம் பெறுவதற்கான வழி பிறக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்களை செய்து கொள்வீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தாய் வழி உறவுகளால் ஆதரவு கிடைக்கும்.

2026: நவம்பர் 2 புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது | 2026 Mercury Transit November 2 Predictions

வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் விலக வேண்டுமா? கார்த்திகை மாதத்தில் இப்படி தீபம் ஏற்றுங்கள்

வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் விலக வேண்டுமா? கார்த்திகை மாதத்தில் இப்படி தீபம் ஏற்றுங்கள்

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் உருவாகக்கூடிய புதாதித்ய ராஜயோகம் காரணமாக பொருளாதாரம் உயர்வதற்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும். வேலை செய்யும் இடங்களில் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு தேடி வரும். தொழில் செய்யக்கூடியவர்களின் ஒப்பந்தங்கள் போடுவதன் வழியாக நல்ல பயன் கிடைக்கும். குடும்பத்தில் வசதிகளும் மகிழ்ச்சியான வாய்ப்புகளும் அதிகரிக்கும் காலகட்டமாகும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் முடிவெடுக்கும் திறன் மேம்படும். செய்யக்கூடிய வேலை தொழில் தொடர்பாக நீங்கள் நம்பிக்கையுடன் முடிவெடுக்கக்கூடிய காலகட்டமாகவும் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக அமையக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழில் செய்யக்கூடியவர்களுக்கு அதிக லாபம் பெறக்கூடிய அளவில் நிபுணர்களின் ஆலோசனை பெறுவீர்கள். நிறைவேறாத வேலையும் நிறைவேறக்கூடிய காலகட்டமாகும்.  

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US