ஐந்து முக விளக்கு ஏற்றலாமா? கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் என்ன?

By Sakthi Raj Nov 19, 2026 04:37 AM GMT
Report

கார்த்திகை மாதம் மிகவும் முக்கியமான மற்றும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. அப்படியாக, இந்த கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா மிகச் சிறப்பாக ஒவ்வொரு வருடமும் வழிபாடு செய்யப்படுகிறது.

அப்படியாக, நாம் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவில் ஆன்மீக முக்கியத்துவத்தையும் அதனுடைய சிறப்புகளையும் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் செம்மல் பாலாறு சுவாமிகள் அவர்கள். அதைப் பற்றி பார்த்து தெரிந்து கொள்வோம்.

கார்த்திகை மாதம் என்பது ஹரியும் சிவனும் ஒன்றே என்கின்ற தத்துவத்தை உணர்த்தக்கூடிய மாதமாக இருக்கிறது.

திருவண்ணாமலை தீபம் நம்முடைய மனதில் அறியாமை நீக்கும் ஒளியாக கருதப்படுகிறது. மேலும், திருவண்ணாமலை கிரிவலம் செல்வது மிகவும் விசேஷமானதாக இருக்கிறது. 16 கிலோமீட்டர் கிரிவலம் செல்வதற்கு முன்பாக பூத நாராயண பெருமாளிடம் அனுமதி பெற்று கிரிவலம் செல்வது மரபு.

ஐந்து முக விளக்கு ஏற்றலாமா? கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் என்ன? | Thiruvannamalai Karthigai Deepam 11 Days Worship

2026: டிசம்பரில் கடக ராசிக்கு உருவாகும் குரு மங்கள யோகம்.. இழந்ததை பெரும் காலம் வந்துவிட்டது

2026: டிசம்பரில் கடக ராசிக்கு உருவாகும் குரு மங்கள யோகம்.. இழந்ததை பெரும் காலம் வந்துவிட்டது

மேலும், கிரிவலத்தை நாம் மன அமைதியுடனும் இறை நம்பிக்கையுடனும் மேற்கொள்வது மிகவும் அவசியம். கார்த்திகை மாதம் முழுவதும் பஞ்சபூத தத்துவத்தை உணர்த்தும் விதமாக வீடுகளில் ஐந்து முக விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு.

அதோடு, திருவண்ணாமலையில் சிவபெருமான் மலையாகவே நமக்கு காட்சி கொடுப்பதாக நம்பப்படுகிறது. எனவே கார்த்திகை தீபத்திருநாளன்று மூலவர் தரிசனம் செய்ய முடியவில்லை என்று கவலை கொள்ள வேண்டாம்.

கிரிவலத்தின் போது மலையை வணங்குவதே நமக்கு முழுமையான பலனை பெற்றுக் கொடுத்து விடுகிறது. மேலும், திருவண்ணாமலையில் தீபம் 11 நாட்கள் தொடர்ந்து எரிகிறது.

ஆகவே, பக்தர்கள் தீபத்தன்றுதான் தரிசனம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை, இந்த 11 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் நீங்கள் சென்று தரிசனம் செய்தாலும் அதற்குரிய முழு அருளை பெறலாம் என்று பல்வேறு முக்கியமான விஷயம் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US