மேஷ ராசியில் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்.. யாருக்கு அதிர்ஷ்டம்?

By Sakthi Raj Mar 25, 2026 11:30 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் ஏப்ரல் மாதம் சந்திரன் மற்றும் சுக்கிரன் இணைவு வைபவ லட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறது. அதாவது சுக்கிர பகவான் மார்ச் 26 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைகிறார்.

ஏப்ரல் 18ஆம் தேதி சந்திர பகவான் மேஷ ராசிக்கு நுழைகிறார். இதனால் குறிப்பிட சிலர் ராசியினர் மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷ ராசியில் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்.. யாருக்கு அதிர்ஷ்டம்? | 2026 Moons Sukiran Brings Vaibhav Lakshmi Rajyog

2026 ராமநவமி எப்பொழுது ? ஸ்ரீ ராமரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 6 குணங்கள்

2026 ராமநவமி எப்பொழுது ? ஸ்ரீ ராமரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 6 குணங்கள்

மேஷம்:

மேஷ ராசியின் முதல் வீட்டில் சந்திரன் சுக்கிரன் இணைவு இவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையை கொடுக்கப் போகிறது. கடினமான வேலைகளையும் இவர்கள் சுலபமாக செய்து வெற்றி பெறப் போகிறார்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தொழில் ரீதியாக லாபத்தை பெறக்கூடிய அற்புதமான காலகட்டமாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகு.

சிம்மம்:

சிம்ம ராசிக்கு சந்திரன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை இவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கப்போகிறது. செய்கின்ற வேலையில் முன்னேற்றமும் அதிர்ஷ்டமும் கிடைக்கும். நீண்ட நாட்கள் முடிவிற்கு வராத விஷயங்களை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை உருவாகும்.

மனிதன் வாழ்க்கையில் கடக்கவேண்டிய கடினமான அந்த ஒரு நொடி எது தெரியுமா என்ன?

மனிதன் வாழ்க்கையில் கடக்கவேண்டிய கடினமான அந்த ஒரு நொடி எது தெரியுமா என்ன?

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு சந்திரன் மற்றும் சுக்கிரன் இணைவு இவர்களுக்கு தொழில் ரீதியாக இழந்த செல்வத்தை மீண்டும் பெறப்போகிறார்கள். அலுவலகத்தில் உங்களுக்கு நீண்ட நாட்கள் தொந்தரவு செய்தவர்கள் விலகிச் செல்லக்கூடிய காலகட்டம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் புதிய முயற்சிகளும் உங்களுக்கு கைக் கூடி வரும். ஒரு சிலருக்கு பொன் பொருள் ஆபரண சேர்க்கை உண்டாக கூடிய காலமாகும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US