உங்கள் வீட்டிற்கு இந்த பூச்சிகள் வந்தால் கவனமாக இருக்க வேண்டுமாம்

By Sakthi Raj Mar 25, 2026 10:06 AM GMT
Report

 வாஸ்து சாஸ்திரப்படி நம்முடைய வீட்டிற்கு வரக்கூடிய ஒவ்வொரு பூச்சிகளுக்கும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பின்னால் ஒவ்வொரு காரணம் காரியங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியாக நம்முடைய வீட்டிற்கு என்ன பறவைகள், பூச்சிகள், விலங்குகள் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

1. உங்கள் வீட்டிற்கு பூரான் வந்தால் சொந்தங்கள் இடையே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமாம்.

2. வீடுகளுக்கு அடிக்கடி அணில் வந்து செல்கிறது என்றால் நாம் பணத்தை சேமித்து வைப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

உங்கள் வீட்டிற்கு இந்த பூச்சிகள் வந்தால் கவனமாக இருக்க வேண்டுமாம் | Reason Behind Animals Birds Insects Coming Home

மனிதன் வாழ்க்கையில் கடக்கவேண்டிய கடினமான அந்த ஒரு நொடி எது தெரியுமா என்ன?

மனிதன் வாழ்க்கையில் கடக்கவேண்டிய கடினமான அந்த ஒரு நொடி எது தெரியுமா என்ன?

 

3. வீட்டிற்கு புறா வந்தால் அமைதி உண்டாகுமாம்.

4. வீட்டிற்கு எலி வந்தால் குடும்பத்தில் இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றல் குறைந்து எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க கூடும் என்பதின் அறிகுறியாகும்.

5. வீடுகளுக்கு கிளி வந்தால் தெய்வீக சக்தி அதிகரிப்பதின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

6. அதேபோல் வீடுகளுக்கு பாம்பு வந்தால் நம்மை நோக்கி ஏதேனும் முக்கிய ஆபத்து வரப்போவதின் அறிகுறி ஆகுமாம்.

உங்கள் வீட்டிற்கு இந்த பூச்சிகள் வந்தால் கவனமாக இருக்க வேண்டுமாம் | Reason Behind Animals Birds Insects Coming Home

2026 ராமநவமி எப்பொழுது ? ஸ்ரீ ராமரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 6 குணங்கள்

2026 ராமநவமி எப்பொழுது ? ஸ்ரீ ராமரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 6 குணங்கள்

7. வீட்டுக்கு பூனை வந்தால் செல்வ செழிப்பு உண்டாக போவதாக அர்த்தமாம்.

8. வீடுகளில் குருவி கூடு கட்டினால் புதிய சொத்துகளின் சேர்க்கையும் வரவுகளும் அதிகமாகும்.

9. வீடுகளுக்கு ஆந்தை வந்தால் மகாலட்சுமி தேவியின் பரிபூரண அருள் நமக்கு எப்பொழுதும் இருப்பதின் அறிகுறி ஆகும்.

10. காகம் வந்தால் முன்னோர்களின் ஆசிர்வாதமும் அவர்களுடைய கண்காணிப்பும் நமக்கு எப்பொழுதும் இருக்குமாம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US