2026 வைகாசி விசாகம்: முருகப்பெருமான் அருளை பெற சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்
கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமான் பக்தர்களுடைய துயரை நொடிப்பொழுதில் துடைப்பவராக இருக்கிறார். முருகப்பெருமான் அருளைப்பெறுவது என்பது எளிது. அதாவது எவர் ஒருவர் தூய மனதோடு அமர்ந்து அவரின் பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்களுக்காக முருகப்பெருமான் ஓடி வந்து உதவுவார்.
இவ்வளவு எளிய மற்றும் சக்தி வாய்ந்த கடவுளான முருகப்பெருமான் அவதரித்த தினத்தையே நாம் வைகாச வைகாசி விசாகமாக கொண்டாடுகின்றோம். ஆதலால், இந்த நாளில் நாம் முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறுகிறது.

வாழ்க்கையில் எதிரிகள் தொல்லைகளால் துன்பம் என்றால் அதிலிருந்து முழுமை விடுதலை கிடைக்கிறது. அப்படியாக வைகாசி விசாக தினத்தன்று நாம் முருகப்பெருமானுடைய முழு அருளை பெற பாராயணம் செய்ய வேண்டிய மந்திரங்களை பற்றி பார்ப்போம்.
வைகாசி விசாகம் அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்:
வைகாசி தினத்தன்று முருகப்பெருமானுடைய படத்திற்கு முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்து கந்த குரு கவசம், வேல்மாறல், கந்த சஷ்டி கவசம் போன்றவை படிப்பது என்பது நம் வாழ்க்கையில் வலிமையும் மனதில் அமைதியையும் கொடுக்கிறது.
அதோடு, முருகப்பெருமானுடைய மந்திரமான "ஓம் சரவண பவாய நம" இந்த மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யும் பொழுது மனதில் தெளிவு பிறக்கும். "ஓம் சுப்ரமண்யாய நம" என்ற மந்திரத்தை 21 முறை வழிபாடு செய்யலாம், முடிந்தவர்கள் 21 முறை இந்த மந்திரங்களை கைகளால் எழுதியும் வழிபாடு செய்யலாம்.

வேண்டுதல் நிறைவேற சொல்ல வேண்டிய மந்திரம் :
ஒரு சிலருக்கு உடனடியாக அவர்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்கின்ற ஒரு நிலைமை இருக்கும். அதாவது, திடீர் சிக்கலில் மாட்டிக்கொண்டு அதில் இருந்து விடுதலை பெறவேண்டும், ஆரோக்கிய குறைபாடுகளில் இருந்து நாம் முன்னேற்றம் பெற வேண்டும் என்று செய்வதறியாத தவிக்கின்ற நேரத்தில் அவர்கள் இந்த மந்திரத்தை பாராயணம் செய்தால் உடனடியாக உங்களுக்கான வழி பிறக்கும்.
"விஸாகம் ஸர்வ பூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம்!
ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்.
சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்: நீங்கள் காலத்தால் வீழ்த்தப்பட்டு அல்லது மனிதர்களால் துரோகம் சந்தித்து மீண்டுவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் முருகப்பெருமானுடைய சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது மனதில் வலிமையும் தடைகளை தகர்த்து முன்னேற கூடிய சக்தியும் கிடைக்கிறது.
ஓம் முருகா…
நமஸ்தே நமஸ்தே மகாசக்திபானே…
நமஸ்தே நமஸ்தே லசத்வஜ்ரபானே…
நமஸ்தே நமஸ்தே கடிங்ஞாஸ்தபானே…
நமஸ்தே நமஸ்தே சூடாவீஷ்டபானே…
ஓம் முருகா…
இந்த மந்திரத்தை நீங்கள் 11 முறை பாராயணம் செய்யும் பொழுது உங்களுக்குள் நடக்கக்கூடிய மாற்றத்தை நீங்கள் உணர ஆரம்பிக்கலாம். அதோடு அந்த மாற்றம் உங்களுடைய வாழ்க்கையில் பிரதிபலிப்பதையும் நீங்கள் காணலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |