2026 ஆம் ஆண்டு கிரகங்கள் தங்களுடைய மாற்றங்களை நிகழ்த்த இருக்கிறார்கள். அதாவது குரு மற்றும் ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டு 12 ராசிகளுக்கும் பல்வேறு தாக்கத்தை கொடுக்க இருக்கிறது. அந்த வகையில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு மீன ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது? புத்தாண்டு நல்ல பலன்களை கொடுக்குமா? என்பதை பற்றி பார்ப்போம்.

மீனம்:
மீன ராசியினருக்கு இந்த 2026 ஆம் புத்தாண்டு ஒரு புதிய தொடக்கமாகவே மாறப்போகிறது. அதாவது அவர்கள் வாழ்க்கை மற்றும் தொழில் ரீதியாக நிறைய புது அனுபவங்களை அவர்கள் பெறப் போகிறார்கள். 2026 ஆம் ஆண்டு வாழ்க்கையின் புரிதலால் இவர்களுடைய கோபம் மற்றும் பிறரை குறை பேசுதல் ஆகியவற்றையும் தவிர்த்து இவர்கள் வாழக்கூடிய அற்புதமான காலகட்டமாகும்.
பொருளாதார ரீதியாக இவர்களுக்கு சரியான நேரத்தில் பணம் கைகளுக்கு வந்து சேரும். பிள்ளைகள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவை எடுக்கக்கூடிய ஆண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய நட்புக்களின் ஆதரவால் இவர்கள் மிகச் சிறந்து விளங்க காத்திருக்கிறார்கள்.
எதில் கவனம் தேவை:
மீன ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக இருந்தாலும் இவர்கள் ஒரு சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு இவர்கள் வீண் கோபம் பிடிவாதத்தை தவிர்த்துக் கொண்டால் நிச்சயம் ஒரு சுமூகமான வாழ்க்கை இவர்கள் வாழலாம். ஆடம்பர செலவுகளை முடிந்த அளவுக்கு தவிர்த்துக் கொள்வது நல்லது.
எதையும் தீர ஆலோசித்து பிறகு முடிவுக்கு வருவது தான் இவர்களுக்கு சிறந்த பலனை கொடுக்கும். தேவையில்லாமல் யாரிடமும் வீணாக வாக்குவாதமும் வார்த்தைகள் விடாதீர்கள் பயணம் செல்லும் பொழுது உடமைகளில் முழுமையான கவனம் தேவை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |