2026: அக்டோபர் நடக்கும் சுக்ரன் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கூடி வரப் போகிறதாம்
வேத ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகங்களுடைய மாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் இருக்கும். அந்த வகையில், சுக்கிர பகவான் தான் செல்வம், வசதி காதல், கலை, ஆடம்பரம், பொருளாதாரம் ஆகியவற்றிக்கு காரணியாக இருக்கிறார். அப்படியாக, சுக்கிரனுடைய நிலை மாற்றம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.
2026 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி அன்று அதிகாலை 3.22 மணிக்கு சுக்கிர பகவான் சித்திரை நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகிறார்.
தற்போது வக்கிர நிலையில் இருக்கக்கூடிய சுக்கிர பகவான் மீண்டும் சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இது முக்கியமான இடமாற்றமாகும். இதனால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் வரும் வாய்ப்புகள் உள்ளது என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிகச் சிறப்பாக இருக்கப்போகிறது. இவர்களுக்கு புதிய நபர்களுடைய அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாட்களாக கைகளுக்கு வராத பணம் வந்து சேரும். பெரிய அளவிலான வியாபார முதலீடுகளை நீங்கள் செய்யக்கூடிய காலகட்டமாக இவை அமையப் போகிறது. சமுதாயத்தில் வசதி வாய்ப்புகளுடன் நீங்கள் வாழ்வீர்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானுடைய இந்த இடமாற்றமானது இவர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியை கொடுக்கப்போகிறது. வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு சாதகமான பலன் வரப்போகிறது. வருமானம் அதிகரிப்பதோடு கடன் அடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திட்டமிட்டு எல்லா வேலையும் செய்து வெற்றி காண்பீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானுடைய இடமாற்றமானது இவர்களுக்கு பொருளாதார விஷயங்களில் நல்ல முன்னேற்றம் கொடுக்கப்போகிறது. கலை மற்றும் படைப்பு துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த தடை விலகும். ஒரு சிலருக்கு வெளிநாடு சென்ற வியாபாரம் செய்யக் கூடிய யோகம் உருவாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |