2026: ஆயில்யம் நான்காம் பாதத்தில் குரு பெயர்ச்சி.. கொடிக்கட்டி பறக்க போகும் ராசிகள் யார்?
ஜோதிடத்தில் மிகவும் சுப கிரகமாக இருக்கக்கூடிய குரு பகவான் அக்டோபர் 8ஆம் தேதி ஆயில்ய நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக பார்க்கப்படுகிறது.
குருபகவான் தற்பொழுது ஆயில்ய நட்சத்திரத்தில் மூன்றாம் பாதத்தில் பயணம் செய்கிறார். அவர் அக்டோபர் எட்டாம் தேதி மாலை 7 மணிக்கு குரு ஆயில்ய நட்சத்திரத்தில் நான்காம் பாதத்திற்கு இடம் மாறுகிறார். அதனால், எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியானது உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்க புதிய வழி பிறக்கும்.
மிதுனம்:
இவர்களுக்கு வாழ்க்கையில் தடைபட்டிருந்த பணிகள் துவங்கும். பதவி உயர் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. சொந்தங்களில் மத்தியில் நல்ல பெயர் உண்டு. கடகம்: இவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது குழந்தைகள் வழியாக நல்ல நன்மைகள் கிடைக்கும். கடந்த காலத்தை விடவும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி:
இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுற்றுச் சூழல் இவர்களுக்கு சாதகமாக அமையும். மனதில் மகிழ்ச்சியையும் அமைதியையும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் அதிகரிக்கும். குழந்தைகளுடைய விஷயங்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |