2026 அக்டோபர்: மீன ராசியினருக்கு பணம் வந்தாலும் இதில் கவனமாக இருக்க வேண்டுமாம்
2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீன ராசி எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். இவர்களுக்கு செவ்வாய் பகவானின் நீசபங்க ராஜயோகம் இந்த மாதம் இவர்களுக்கு எதிர்பாராத பண வரவை கொடுக்கப்போகிறது.
திடீர் பண மழை பொழியும் வாய்ப்பு உண்டு. அக்டோபர் 21க்கு பிறகு குரு பகவான் ஆறாம் இடத்திற்கு சென்று மறைவதால் தொழில் அல்லது வேலையில் இவர்கள் சில சவால்களை சந்திக்கலாம். சட்ட ரீதியான சிக்கல் ஆடிட் தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது.
மேலும், அக்டோபர் மாதம் புதிய முதலீடுகளை இவர்கள் தவிர்ப்பது நன்மை தரும். சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கையால் எட்டாம் இடம் பாதிக்கப்படுவதால் நீங்கள் வாகனம் ஓட்டும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

தேவையில்லாத சாகசங்கள் செய்யாதீர்கள், உடல் நலனிலும் மிகுந்த பாதுகாப்போடும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். உங்களுக்கு இந்த மாதம் அரசு சார்ந்த உதவி அல்லது சலுகை கிடைப்பது சுற்றுச்சவாலாகத்தான் இருக்கும். பெரிய சொத்துக்கள் வாங்குவதில் சில சிக்கல்கள் வரலாம். அவசரப்பட தேவை இல்லை.
பரிகாரங்கள்:
இவர்கள் அக்டோபர் 10ஆம் தேதி அன்று மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வது மிகுந்த சிறப்பை கொடுக்கும். இந்த மாதம் முழுவதும் சிவபெருமானை வழிபாடு செய்வது உகந்தது.
குரு சாபம் ஏற்படாமல் இருப்பதற்கு பெரியவர்களிடம் மிகுந்த கவனமாக பேசுவதும் பசுக்களுக்கு மஞ்சள் நிற வாழைப்பழங்களை வழங்குவதும் அவசியம். அக்டோபர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டம இருப்பதால் அந்த நாட்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.