இந்த எண்ணில் பிறந்தவர்களை காதலிப்பவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலியாம்
ஜோதிட ரீதியாக எண் கணிதமும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட சில எண்ணில் பிறந்தவர்கள் அவர்கள் வாழ்க்கையில் உண்மையாகவும் அவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கை துணைக்கு ஆதரவாகவும் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
அந்த வகையில் , எண் கணித நம்பிக்கையின் அடிப்படையில் எண் 2ல் பிறந்தவர்கள் ஒருவரிடம் அன்பு வைத்தால் எப்பொழுதும் உண்மையாக அன்பு வைக்கிறார்கள். காதலித்தாலும் மனதார காதலிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள்.

நண்பர்களாக இருந்தாலும், துணையாக இருந்தாலும் கடினமான காலங்களில் அவர்களை விட்டு விலகாதவர்களாக இருக்கிறார்கள். அதாவது எந்த மாதத்திலும் 2, 11, 20 ஆக 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் இரண்டு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
எண் கணிதத்தில் இரண்டாம் என்னுடன் சந்திரன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்த எண்ணை கொண்ட நபர்கள் மிகவும் உணர்ச்சி மிக்கவர்களாகவும், அன்பை ஆழமாக வெளிப்படுத்த கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
அவர்கள் உறவை மனதார வெளிப்படுத்தும் நபர்கள், நேர்மையான சிந்தனை கொண்டவர்கள். அவர்களுடைய மென்மையான மனம் சில நேரங்களில் ஏமாற்றத்தை சந்தித்தாலும் அவர்கள் அன்பு செலுத்துவதை நிறுத்துவதில்லை. இந்த எண்ணில் பிறந்தவர்கள் துணையாக வருவதற்கு கொடுத்துவைத்தவராக இருக்க வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |